நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 10, 2018

இளம்பெண்ணின் காதல் திருவிளையாடல் : விவாகரத்து செய்யாமலே முதல் காதலனை மணந்ததாக புகார்




வேலூர்: 2 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக 18 வயது இளம் பெண் மீது முதல் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயதான இம்பெண் சமிதா. இவருக்கும் இவரது உறவினரான சக்திவேலுக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மணநிகழ்ச்சியின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக இரு வீட்டினருக்கம் ஏதோ சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது.  பின் சமரசம் ஏற்பட்டாலும் மீண்டும் சில நாட்களிலேயே பழைய தகராறை காரணம் காட்டி திருமணம் ஆன சமிதா கோபித்துக் கொண்டு தாய்வீடு சென்று விட்டார்.
சக்திவேல் பின்னர் தொடர்ந்து சமாதானத்திற்கு முயற்சித்த போதெல்லாம், தாம் கோபமாக இருப்பதாகவே காட்டிக் கொண்ட சமிதா சக்திவேலுவுடன் செல்ல மறுத்து விட்டார்.

இந்த நிலையில் மனைவியுடன் தாம் சீக்கிரம் சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியாக கொஞ்சி, குலாவி கொண்டு நடந்து சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் சிறிது நேரம் அவர்களை பின் தொடர்ந்தார். அவர்களின் செய்கையிலிருந்து அவர்களுக்கு திருமணம் ஆக்விட்டது என்பதை தெரிந்து மனம் உடைந்தார். அழுகையையும், ஆத்திரத்தையும் அடக்கி கொண்டு அவர்கள் முன் போய் நின்று சமிதாவை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது கூலாக பதிலளித்த சமிதா தம்முடன் கிரிவலம் வருபவர் பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்றும், தற்போது தாம் அவனை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சக்திவேல் உடனடியாக காவல்நிலையம் சென்று தனது மனைவி தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞரை 2 வது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார். 

அதன் பிறகு விசாரித்த காவல்துறையினர் சமிதாவின் காதல் திருவிளையாட்டை கேட்டு அதிர்ந்தனர். சமிதா 11-ம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்த நிலையில், இருவரும் எல்லை மீறி பழகியதால் கர்ப்பம் அடைந்துள்ளார்.
கார்த்திக் தங்களை விட குறைந்த ஜாதி என்பதால் சமிதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர், சமிதாவை ஊரை விட்டு சாலை நகரில் உள்ள உறவினரான சக்திவேல் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர். அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், சமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இதில் கொடுமை என்றால் சமிதாவை தங்களது வீட்டில் தங்க வைத்திருந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு இந்த விவரங்கள் எதுவுமே தெரியாமல் மறைக்கப்பட்டது தான். கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமிதா, பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமிதா 18 வயது நிரம்பியவர் என்றாலும், முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்து கொண்டது குற்றம் என்ற அடிப்படையில் சமிதாமீது வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment