கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் போதநாயகி (29) திருகோணமலை சங்கமித்த கடலில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது மரணம் தொடர்பாக மர்மம் நிலவினாலும், அவரது கணவன் செந்தூரன் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. போதநாயகியின் இறுதிச்சடங்கிலும் செந்தூரன் கலந்துகொள்ளவில்லை.
போதநாயகியை விடவும் அவர் வேறு பெண்களையும் திருமணம் செய்தார், போதநாயகியிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டினார் என்றும் போதநாயகியின் தாயார் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
தன்மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், முகநூல் கணக்கையும் முடக்கி வைத்து விட்டு செந்தூரன் தலைமறைவாக இருந்தார். நீண்ட தலைமறைவு வாழ்க்கையின் பின், நேற்று திருகோணமலை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தார்.
போதநாயகி மரணம் தொடர்பான வழக்கு நேற்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நேற்று (22) இடம்பெற்றது.
வழக்கு விசாரணையின் போது, இறப்பு தொடர்பான அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் இதுவரை மன்றிற்கு வழங்கப்படவில்லையென்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வன்னியூர் செந்தூரனும், அவரது சகோதரனும், தாயாரும் சமூகமளித்திருந்தனர். செந்தூரனுடன் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பெரும் பட்டாளமே வந்திருந்தது. அதில் நண்பர்களே அதிகம். வாகனமொன்றில் அனைவரும் வந்ததாக கூறப்படுகிறது.
செந்தூரனுடன் வந்தவர்களில் சிலர் நீதிமன்றத்திற்கு வெளியில் ரௌடித்தனத்திலும ஈடுபட்டனர். போதநாயகியின் சகோதரர்கள் வழக்கு விசாரணைக்காக வந்தபோதும், விசாரணையை முடித்துக் கொண்டு திரும்பிய போதும் அவர்களுடன் ரௌடித்தனத்தில் ஈடுபட்டனர்.
இதனை அவதானித்த பொலிசார், ரௌடித்தனத்தில் ஈடுபட்ட செந்தூரன் தரப்பை எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment