யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு ஆடம்பர மகிழுந்தில் பயணித்த இரண்டு இளைஞர்களிடமிருந்து 2 ஆயிரத்து 600 போதைக் குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அபய விக்கிரமவின் கீழ், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களான எம்.தென்னக்கோன், ஜகத் பொன்சேகா ஆகியோரின் வழிகாட்டலில் ஓமந்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் சில்வா தலைமையில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சன்னஸ்கல, சார்ஜன் மாரசிங்க, கொன்ஸ்டபிள்களான புவனேஸ்வரன், பிரசாத், ஜானக, குமார, நிசாந்தன், பிரசன்னா சாரதி விராச்; ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஓமந்தைப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆடம்பர மகிழுந்தை மறித்துச் சோதனை செய்தனர். இதன்போது 2 ஆயிரத்து போதைக் குளிசைகள் மகிழுந்திலிருந்து மீட்கப்பட்டன.
அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகத்தைச் சேர்ந்த 34 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமை ஆயிரத்து 600 போதைக் குளிசைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தக் கைதும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment