நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, June 17, 2024

மாறாமல் உள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம் | Gold Price Srilanka Gold Rate In World Gold Market


மாறாமல் உள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம்!
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் கடந்த சில தினங்களாக இலங்கையில் உயர்வடைந்த தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்த நிலையில் இன்றைய தினம் (17) மாற்றமடையாமலுள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 701,879 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,760 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Gold Price Srilanka Gold Rate In World Gold Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 181,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,670 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 173,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 192,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 177,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment