நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, July 1, 2024

சுற்றுலா தளத்தில் 2 மகள்களை கைவிட்டுவிட்டு ஓடிய கனேடிய தாய்: நெஞ்சை உலுக்கிய காரணம்! Canada Crime


சுற்றுலா தளத்தில் 2 மகள்களை கைவிட்டுவிட்டு ஓடிய கனேடிய தாய்: நெஞ்சை உலுக்கிய காரணம்!
Canada Crime

சுற்றுலாத் தளமான கன்குனில் (Cancun) இரு கனடா சிறுமிகளை கைவிட்டுச் சென்றதாக கனடா பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளை கைவிட்ட தாய்

  கனேடிய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கான செலவுக்கு பணம் இல்லை என்று கூறி சுற்றுலாத் தளமான கன்குனில் (Cancun) கைவிட்டு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 

3 வயதிற்குட்பட்ட  இரண்டு பெண் குழந்தைகள் சுற்றுலாத் தலமான ஒரு தெரு மூலையில் தனியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

சாட்சிகள் வழங்கிய தகவல் படி, தாய் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடுவதை பார்த்ததாக தெரிவித்தனர்.

தாய் கைது

இதையடுத்து காவல்துறை அழைக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பாக  காவலில் வைக்கப்பட்டனர்.

அதே சமயம் சம்பந்தப்பட்ட பெண் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

 அப்போது தானும் தனது தனது குழந்தைகளும் கனேடிய குடிமக்கள் என்றும்,  அவர்களை வளர்க்க பண வசதி இல்லை என்பதால் தனது குழந்தைகளை விட்டுவிட்டு சென்றதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment