நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, July 2, 2024

இந்தியாவில் துயரம் : கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி


இந்தியாவில் துயரம் : கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி
இந்தியாவின்(india) உத்தரபிரதேச மாநிலத்தில்(uttar pradesh) இடம்பெற்ற மத சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத நிலையில் அந்த சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று(02)  இடம்பெற்ற இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

கடும் நெரிசல்

நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் என 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் துயரம் : கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி | 87 Killed In India Stampede

இதனால் இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர்,பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத்(Yogi Adityanath )தனது எக்ஸ் பதிவில், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது இரங்கலைத் தெரிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு இந்தியக் கூட்டணியைச் சேர்ந்தவர்களை கேட்டுக்கொண்டார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job