தனியார் நிறுவனம் ஒன்றின் வெளிக்கள உத்தியோகத்தரான யுவதி ஒருவரின் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்டதாகச் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெளிக்கள உத்தியோகத்தரான யுவதி மற்றொரு உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கையில் அவர்களது மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்துள்ள மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்திய பின் அந்த மோட்டர் சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வெளிக்கள உத்தியோகத்தரான பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தெடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுள்ளதாக சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற மறுதினம் இரவு ராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளையிட்ட தங்கச் சங்கிலி புத்தளம் பிரதேச
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment