சுவிட்சலாந்து லவுசானில் வாழும் ஈழத்தமிழருக்கு கடந்த சனிக்கிழமையன்று இனம் தெரியாத தமிழர்களால் கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியதால் இரண்டு விரல்களிலும் ஒரு கையிலும் பாரும் வெட்டுக்காயங்களுடன் லவுசான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தெரிய வரும் தகவல்களாவது
குறித்த நபர் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார் இந்த திருமணம் ஜெனிவா இந்து ஆலயத்தில் நடை பெற்றுள்ளது.
இதற்கான திருமண பத்திரம் ஆலயத்தினரால் சான்றிதள் வழங்கப்பட்டுள்ளது தற்போது
மேலும் இநத நபர் இன்னொரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதே நேரம் இந்த நபர் இலங்கையில் இருந்து இன்னும் ஒரு அங்கவீன பெண்ணை இங்கு வரவழைத்து அவரையும் திருமணம் செய்துள்ளார்.
அங்கவீனப் பெண்களுக்கு சுமார் மாதம் தோறும் 6.500 சப் ஊதியமாக கிடைக்கும் என்று இவர் கூறியுள்ளார்.
இந்த விடயங்களைத் தெரிந்துகொண்ட இவரது முதல் மனைவி கனடாவில் இருந்து வந்து பொலிசாரிடம் சென்று தனக்கு ஜெனிவாவில் திருமணம் நடந்ததையும் அதற்க்கான திருமண ஆணைப் பத்திரத்தையும் பொலிசாரிடம் காட்டி உள்ளார்.
அதனை சுவிஸ்போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை
அதன் பின்னர் இவரது முதலாவது மனைவி தனது மகளுடம் கனடா சென்று விட்டார்.
தினேஷ் குலபாலசிங்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களாலேயே இநத சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதையும் போலீசார் இனம் கண்டுள்ளதாக தெரிகிறது இந்த விடயம் அன் நாட்டு செய்தியில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.






0 comments:
Post a Comment