கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார்.
இதனையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக சுந்தரத்துடன் ஒரே வாகனத்தில் பொலிசார் அழைத்துச் சென்றனர், அப்போது சுந்தரம் அபிராமியின் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை என்றும் அபிராமி தான் தொடர்ந்து கதறி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, வரும் 12 வரை நீட்டித்து,
மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அபிராமி சிறையில் தனது துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார், தற்செயலாக அதைப் பார்த்துவிட்ட சிறை வார்டன் உடனடியாக அதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
0 comments:
Post a Comment