பூநகரி சங்குப்பிட்டி பாலம் வடக்கில் மிகவும் பிரசித்திபெற்ற, சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடம்...
இப் பாலத்தால் புதிதாக பயணம் செய்யும் எவரும் இப் பாலம் அமைந்துள்ள இடத்தை அதிகம் ரசிப்பதுடன் அவ் இடத்தில் இறங்கி போட்டோ எடுத்துச் செல்வது சர்வ சாதாரணம்.
இப்பாலத்தின் ஒரு பக்கம் பயணிகள் நின்று இளைப்பாற செல்ல ஏதுவாக இரு இளைப்பாறும் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் அழகிய மரங்களை வைத்து இவ் இடத்தை இன்னும் அழகாக்கலாம். ஆனால, பிரதேசத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக தேர்தல் காலத்தில் வாய்கிழிய கத்திய அரசியல்வாதிகள் இது தொடர்பில் எதுவித முயற்சிகளிலும் இறங்காமல் இருக்கின்றனர். அதைக்கூட மன்னித்துவிடலாம்.
ஆனால், இங்கு இளைப்பாறி செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் உணவு மிகுதிகளையும், காதலர்கள் தாங்கள் அருந்திச் செல்லும் மென்பானப் போத்தல்களையும், இரவுநேரம் வந்து செல்லும் குடிகார இளைஞர்கள் Beer 🍺 போத்தல் மற்றும் Tin Beer போத்தல்களையும் அவ் இடத்தில் உள்ள கடலில் தூக்கி வீசிவிட்டு செல்கிறார்கள்.
அவர்களை குற்றம் சொல்வதற்கு முதல், இவ் இடத்தில் குப்பைகளை போட, உரிய முறையான குப்பை தொட்டிகள் வைக்காத பூநகரி பிரதேச சபையை தான் நாங்கள் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.
அடேய் பூநகரி பிரதேச சபையை சேர்ந்த அரசியல் அறிவாளிகளே...உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான்...
“பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட இந்த அழகிய பாலத்திற்கு அருகில் இருக்கும், இந்த மக்கள் இளைப்பாறிச் செல்லும் இடங்களில் ஓரிரு குப்பை தொட்டிகளையாவது வைக்க வேண்டும் என்ற சிந்தனை இதுவரை தோன்றாத நீங்கள் பூநகரி பிரதேச மக்களிற்கு என்னத்தை செய்து கிழிக்கப் போகிறீர்கள்.?
உங்களுடைய முட்டாள்தனத்தில், அழகான கடற்கரை அசிங்கமாவதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படப் போவதை அறியாத உங்களிற்கு எதற்கு பிரதேச சபை உறுப்பினர் என்ற பதவி.....?🖕🖕🖕
பூநகரி பிரதேச சபை #உறுப்பினர்களே...உங்களிற்கு #சூடு #சுரணை ஏதாவது #இருந்தால், இப் #பிரச்சனைக்கு ஒரு #வாரத்திற்குள் #தீர்வைகாணவும்.
#நன்றி...#மகிழ்ச்சி
(குப்பை கூழங்களை கொண்ட குறித்த பகுதிகளை எனது கமெராவுக்குள் நான் சிறைப்படுத்திக் கொண்ட ஒளிப் படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)
22.10.2018நகரி
0 comments:
Post a Comment