தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளை மறுதினம் யாழில் நடைபெறவுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிச் சின்னத்துடன் அழைப்புகள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் மர்மநபர்கள் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மாபெரும் மீழெழுச்சி- தலைவன் வழியில் மக்கள் பேரவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம் எனப் குறிப்பிடப்பட்டு புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழே வெளியிடப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமும் முதலமைச்சர்விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேச அடுத்த கட்ட அறிவிப்பும் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ் நகரிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையால்
பலருக்கும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் மர்ம நபர்கள், அந்த கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் இந்த போலி அழைப்பிதழை அனுப்பியிருக்கலாமென கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment