நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 6, 2018

சர்கார் மேடையில் விஜய் பேச்சு ; விஜய் இப்படிப்பட்டவரா ; கஸ்தூரி கருத்து


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
   
       
   
  இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த இரண்டாம் திகதி நடைபெற்றது. இந்த விழாவில், ரைமிங், அரசியல் என விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. 

குறிப்பாக, ‘உம்முனு... கம்முனு...’ என்ற ரைமிங், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

“சர்கார் இசை வெளியீட்டு விழாவில்,
   
       
   
  தளபதி விஜய்யின் அருமையான பேச்சைக் கேட்டேன். அசத்தல், செம பஞ்ச்கள். காந்தி பற்றியும், அரசியல் பற்றியும் அவர் பேசும்வரை, அவருக்காக இந்த உரையை யாரோ எழுதிக் கொடுத்திருப்பார்களோ என்று ஆச்சரியப்பட்டேன். பிரமாதம், வேகம்... இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள். விஜய் இப்படிப் பேசுவார் என சன் டிவி நிர்வாகமே நினைத்திருக்காது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

ஆக, விஜய் பேச்சு உலகில் அனைத்து இரசிகர்களுக்கும் ஒரே கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment