இலவச மருத்துவம், இலவசக்கல்வி பற்றி சினிமாக்கள் பேசும்போது தான் இலங்கை மீதான மதிப்பு கூடுகிறது என்று ஒரு பதிவிட்டிருந்தேன். அதில் பல இந்திய நண்பர்கள் ஆச்சரியத்துடன் 'இலங்கையில் எல்லாம் இலவசமா?' என்று கேட்டிருந்தார்கள். எந்த குழப்பமும் இல்லாத சிங்கப்பூரை மேன்ஷன் பண்ண முடியுமாக இருந்தால் முப்பது வருட கொடூர யுத்தம், சர்வதேச அழுத்தங்களோடு பார்க்கும்போது இலங்கையின் நிலை நிச்சயம் ஒரு சாதனை தான்.
இந்தியாவில் அரச பள்ளிகள் இலவசம், மருத்துவமனைகளும் இலவசம் என்று சில நண்பர்கள் கூறியிருந்தார்கள். இலவசமாக கொடுப்பது வேறு, தரத்தை நிரணயிப்பது வேறு. தரமான பொருட்கள் அல்லது சேவைகளின் இலவசம் தான் உண்மையில் இலவசமாக கருதப்படும். அந்த மென்ட்டாலிட்டி இந்தியாவில் இல்லை என்பதே உண்மை.
தன் பிள்ளை அரச பள்ளியில் படிக்கிறது என்பதை விட ப்ரைவேட் கான்வன்ட்டில் படிக்கிறது என்பதை தான் அங்கே பெருமையாக நினைக்கிறார்கள். அந்த தர நிர்ணயம் இலவசத்தை அப்படியே தூக்கி சாப்பிட்டுவிடுகிறது. ஆனால் இங்கு ரோயல் இன்ஸ்டிட்டியூட்டை விட ரோயல் கொலேஜ்ஜூக்கே கெத்து அதிகம். கேட்வே காலேஜை விட இந்துக்கல்லூரிக்கு மவுசு அதிகம். அதனால் தான் இலங்கையின் கல்வித்தரம் இன்னும் பேணப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் அதே வசதி அரச மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தங்களால் சமாளிக்க முடியாத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளே NHSL க்கும் CSTH க்கும் அனுப்புகிறது. இலங்கை மருத்துவத்தை பொறுத்தவரை Time and Comfort தான் வேறுபாடு. உங்களுக்கு இந்த இரண்டும் வேண்டும் என்றால், அதற்கான வசதியிருந்தால் தனியார் மருத்துவமனையை நாடலாம். ஆனால், மருத்துவ சேவையில் எந்த வேறுபாடும் கிடையாது. ஆக, சொகுசு தேவைப்படாத ஏழைக்கு எந்த சவாலும் இங்கு இல்லை.
இந்த பதிவை எழுதும்போது இப்படிப்பட்ட ஒரு சிஸ்டத்தை கொண்ட நாட்டை தனியார்மயப்படுத்தி, கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் முயற்சிகள் தான் கண்முன்னே வந்து போகிறத
#Rimazahmed
0 comments:
Post a Comment