வாளால் வெட்ட வருபவரை கொலை செய்வதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமிருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட
இந்த விடயத்தினை அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் தெரிவித்துள்ளார்.
வாளால் வெட்டுவதற்காக ஒருவர் எங்களை நோக்கி வருவாராயின் அவரை நாங்கள் கொலை செய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கின்றது என அவர் இந்த இடத்தில் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் குப்பிளான் மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையிலான விசேட சந்திப்பு ஒன்று அண்மையில் யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
குப்பிளான் பகுதியில் பெரும் திருட்டுக்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் அந்த பிரதேச மக்களால் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கணேசநாதன் மேற்கண்ட விடயத்தினை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
”ஒன்றை மட்டும் நினையுங்கள், நாங்கள் பிறந்த அன்றே
ஆகவே இறப்பைப் பற்றி யோசிக்காதீர்கள். இந்த நாட்டிலே ஒவ்வொரு பொதுமகனுக்கும் தற்காப்பு உரிமை இருக்கிறது.
அந்த உரிமை கொலைசெய்வதற்கும் பொருந்தும். ஒருவர் வாளுடன் வெட்ட வாறார் என்றால் அவரைக் கொலை செய்வதற்கு சட்டத்திலே இடம் இருக்கிறது. தயவு செய்து அதற்காக யோசிக்கவேண்டாம்.
அதற்கு முதலில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்படி வாள்வெட்ட ஒருவர் வருவாராயின் நீங்கள் பத்து இருபதுபேர் ஒன்றாகச் சேர்ந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொலை செய்வீர்களாயின் அன்றிலிருந்து எங்கள் கிராமம் திருந்தும்.” என்றார்.
0 comments:
Post a Comment