பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை உடனடியாக புதுப்பித்துக் கொள்ள தவறினால் ஐரோப்பா நாடுகளுக்கு செல்வதில்
உரிய ஒப்பந்தம் ஏதுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற நேரிட்டால் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்டுகள் செல்லாததாகிவிடும்.
இதனால் பிரித்தானியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என கூறும் அரசாங்க அதிகாரிகள்,
நீண்ட பட்டியல் ஒன்றையும் இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ளனர். அதில்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் எனில் இனிமேல் பிரித்தானியர்கள் சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெற வேண்டும்.
ஐரோப்பியாவில் இனி பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் எனில் இனிமேல் புதிய உரிமம் பெற வேண்டும்.
Brexit ஒப்பந்தம் அமுலுக்கு வந்தால் பிரித்தானியாவில்
Brexit ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னர் நீல வண்ண பாஸ்போர்ட்டுகள் புழக்கத்திற்கு வந்து விடும்.
மேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் பாஸ்போர்ட்டு வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
மட்டுமின்றி பிரித்தானிய சுற்றுலா பயணிகள் ஐரோப்பிய நாடுகளில் வாகனம் வாடகைக்கு எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு.
தற்போது பிரித்தானியாவில் உள்ள அஞ்சலகங்களில் £5.50 கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment