50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, June 12, 2024

யாழில் ஆங்கிலத்தில் உறுதி எழுதி தன்னை ஏமாற்றி விட்டதாக தம்பியும் மனைவியும் கனடா அண்ணனு்ககு எதிராக முறைப்பாடு!!


யாழில் ஆங்கிலத்தில் உறுதி எழுதி தன்னை ஏமாற்றி விட்டதாக தம்பியும் மனைவியும் கனடா அண்ணனு்ககு எதிராக முறைப்பாடு!!

கனடாவிலிருந்து கொழும்புக்கு குடும்பமாக வந்த அண்ணன் தன்னையும் தனது மனைவியையும் ஏமாற்றி விட்டதாக கொழும்பில் ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார். அவர் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டில் பின்வருமாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள 40 பரப்பு காணி எனது பெற்றோருக்கு இருக்கிறது. அதன் உறுதி பெற்றோர் இறந்த பின்னர் என்னிடமே இருந்தது. 1990ம் ஆண்டு யுத்த காலத்தின் போது காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து யாழில் வேறு இடங்களில் மிகுந்து துன்பத்துடன் வசித்து வந்தோம். அந் நேரத்தில் 20 வயதான அண்ணன் புலம்பெயர்ந்து கனடா சென்றார். அந் நேரம் 16 வயதான நான் பெற்றோருடன் வாழ்ந்து வந்தேன். எனது அப்பா சீமெந்து தொழிற்சாலையில் முக்கிய பொறுப்பில் இருந்தார். 

2005ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. மீண்டும் யுத்தம் ஏற்பட்ட போது நானும் எனது பெற்றோர் மற்றும் மனைவியும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து சென்றோம். அங்கு கனடா அண்ணன் வாங்கிய வீட்டிலேயே தங்கியிருந்தோம். நான் கொழும்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன்.என்னுடன் வாழ்ந்து வந்த எனது அப்பா 2012ம் ஆண்டும் அம்மா 2015ம் ஆண்டும் இறந்து விட்டார்கள். அந் நேரம் காங்கேசன்துறைபகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. இந் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கொழும்பில் அண்ணனின் வீட்டில் தங்கியிருந்த என்னையும் எனது குடும்பத்தையும், வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீடு வாங்கவுள்ளதாக கூறி எழும்புமாறு கனடாவிலிரு்நது அண்ணன் உத்தரவிட்டார். அதன்படி நான் அங்கிருந்து வெளியேறி  யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்தேன். 

எனது மகள் மற்றும் மகனின் கற்றல் நடவடிக்கைக்காக நல்லுார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தற்போதும் வசித்து வருகின்றேன். இந் நிலையில் கடந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து வந்த அண்ணன் என்னிடமிருந்த பெற்றோரின் சொத்தான அந்த உறுதியை இரு பகுதிகளாக பிரிப்போம் என கூறினார். நானும் அதற்கு உடன்பட்டேன். அண்மையில் விடுவிக்கப்பட்ட அந்த காணியை அண்ணனே முழுமையாக துப்பரவு செய்தார். அத்துடன் இரு பகுதிகளாக பிரித்தும் எல்லைகள் இட்டார். காணியை தானே காசு கொடுத்து அளந்து அந்த ஆவணத்தையும் எடுத்தார். அவற்றைப் பார்த்து நான் மிகவும் திருப்தியடைந்தேன். அதன் பின் பெற்றோரின் சொத்தை எமக்கு மாற்றுவதற்காக பெற்றோரின் மரணச்சான்றிதழ்கள் மற்றும் பல ஆவணங்களை அண்ணன் கொழும்பில் தங்கியிருந்து கேட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து அவற்றை கொடுத்திருந்தேன். அதன் காணியை இரு பகுதிகளாக பிரிந்து எழுதி வைத்துள்ளதாகவும் மனைவியுடன் கொழும்புக்கு வருமாறு கேட்டார். 

நானும் உடன்பட்டு அங்கு சென்றேன். சிங்கள சட்டத்தரணி ஒருவரே குறித்த காணியை எழுதியிருந்தார். எனக்கு சிங்களம் மிகக் குறைந்த அளவே தெரியும். ஆனால் உறுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அண்ணன் தவறு செய்ய மாட்டார் என நினைத்து காணியின் வரை படத்தில் எனது பங்கு குறிக்கப்பட்டிருந்ததை பார்த்து திருப்தி அடைந்து சட்டத்தரணி நீட்டிய இடத்திலெல்லாம் நானும் மனைவியும் கையொப்பம் இட்டோம். எனதும் எனது மனைவியின் அடையாள அட்டைகளை சட்டத்தரணி புகைப்படம் எடுத்தும் வைத்திருந்தார். நீங்கள் அண்ணணுக்கு காணி எழுத சம்மதம்தானே என தமிழில் சட்டத்தரணி ஒரு தடவை கேட்ட போது எனக்கு அவர் எதற்காக அவ்வாறு கூறினார் என புரியாது ஓம் என தலையாட்டினேன்.
காணி எழுதி முடிந்த பின்ன அடுத்த நாள் எனது வங்கிக் கணக்குக்கு 30 லட்சம் பணத்தை வைப்பிலிட்டதாக அண்ணன் கூறினான். நான் மிகுந்து ஆச்சரியப்பட்டு ஏன் அண்ணா இவ்வளவு பணம் வங்கியில் எனக்காக போட்டீர்கள் என கேட்ட போது அது காணி நீ எனக்கு எழுதி தந்ததுக்கான பணம் என கூறிய போது நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். 

ஏனெனின் எனது 20 பரப்பு காணியின் தற்போதய பெறுமதி 2 கோடி ரூபாவுக்கு மேல் வரும். அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதன் பின் யாழில் உள்ள சட்டத்தரணி ஒருவரை அணுகினேன். அவர் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது கொழும்பில் வைத்து எழுதிய காணி உறுதியின் பிரதி சட்டத்தரணிக்கு அனுப்பினார் அண்ணன். அதில் எனது பங்கான 20 பரப்பு காணியையும் அண்ணனுக்கு நன்கொடையாக வழங்குவதாக இருந்தது. அதற்கு பின் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என சட்டத்தரணி கூறி பொலிசாரிடம் முறையிடும்படி கூறினார். இது தொடர்பாக அண்ணனிடம் கதைத்த போது அண்ணன் என்னை தரக்குறைவாக கடுமையாக ஏசியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். அதன் பின்ன கடந்த வாரம் அண்ணன் மீண்டும் தனது குடும்பத்துடன் கனடா சென்றுவிட்டார். தற்போது அந்தக் காணிக்குள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதுடன் காணியும் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. தன்னை ஏமாற்றிய அண்ணனு்ககு நடவடிக்கை எடுங்கள்” என தம்பி பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job