மனைவியுடன் உறவு கொள்வதை விட நண்பனுடன் போதைப் பொருள் உட்கொள்வதே இன்பம்!! கொழும்பில் நதிகுமாரியை கொன்றது எப்படி?
தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி மனைவியை கொன்ற கணவன், கடந்த 4 நாட்களாக பொலிசாரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளது தெரிய வந்தது. கணவனும், அவரது நண்பனும் இணைந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கணவன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருகா நதி குமாரி என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் தனது கணவருடன் தலங்கம உத்யான மாவத்தை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததுடன், கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையினால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அவரது நண்பர் ஒருவரும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தார். உயிரிழந்த பெண்ணின் கணவர், அந்த நண்பரின் வீட்டுக்கு செல்வதும், நண்பர், இவர்களின் வீட்டுக்கு வருவதும் வழக்கம். எனினும், உயிரிழந்த பெண்ணுக்கு, போதைக்கு அடிமையான நண்பர் வருவதில் விருப்பமிருக்கவில்லை. இதனால் தம்பதியினரிடையே மோதல் வலுத்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி மாலை கணவர், தனது நண்பருடன் வீட்டுக்கு வந்துள்ளார். நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்ததால் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி, அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்புமாறு கூறியுள்ளார்.
இந்த தகராற்றில் நண்பரும் தலையிட்டு, கணவருக்காக பேசியுள்ளார்.
தகராறு உச்சமடைந்து, நண்பரும் கணவருமாக இணைந்து, கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்கியுள்ளனர்.
மனைவியின் தலை, கழுத்து மற்றும் பல இடங்களில் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
கணவரும், நண்பரும் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு ஹிகுராக்கொட பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்கள்.
அவர் கொல்லப்பட்டதால் அச்சமடைந்த இருவரும், அதை மர்ம மரணமென சோடிக்க முயன்றனர். தலங்கம பொலிசில், பொய்யான முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் வந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில், பொய்யான முறைப்பாடு அளிக்கப்பட்டதும், கணவனும் நண்பனுமே கொலையாளிகள் என்பதும் தெரிய வந்தது.
31 வயதான ஹிங்குரக்கொட பகுதியைச் சேர்ந்த கணவரும், 44 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்த மற்றைய சந்தேகநபரும் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, வீட்டில் ஒரு நாய் கட்டப்பட்டிருந்ததாகவும், குறித்த நாய்க்கு சுமார் 5 நாட்களாக உணவளிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment