நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 2, 2024

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் | Increased Hourly Wages In British Columbia


கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்
கனாடாவில் (Canada) முக்கிய மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு

இதுவரை காலமும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.75 டொலர்களே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3.9 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Increased Hourly Wages In British Columbia

இதன்படி, மாகாணத்தில் குறைந்த பட்ச மணித்தியால சம்பளம் 17.40 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் மாற்றம்

இந்த நிலையில், கனடாவில் குறைந்த சம்பளம் வழங்கும் மாகாணமாக காணப்பட்ட பிரிட்டிஸ் கொலம்பியா, அதிகளவு சம்பளம் வழங்கும் மாகாணமக மாற்றமடைந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பள அதிகரிப்பானது, பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment