நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, June 1, 2024

இந்தியாவின் பிரபல நடிகரை கொலை செய்ய முயற்சி - இலங்கைக்கு தப்பியோட திட்டம் | Murder Salman Khan And Escape To Sri Lanka


இந்தியாவின் பிரபல நடிகரை கொலை செய்ய முயற்சி - இலங்கைக்கு தப்பியோட திட்டம்
இந்தியாவின் பிரபல நடிகரான சல்மான் கானை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான் கான் பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் மீது மற்றொரு கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யும் நோக்கில் சதித் திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை முயற்சி

தனஞ்சய் தபேசிங் என்ற அஜய் காஷ்யப், கௌரவ் பாட்டியா என்ற நஹ்வி, வாப்சி கான் என்ற வசீம் சிக்னா மற்றும் ரிஸ்வான் கான் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Murder Salman Khan And Escape To Sri Lanka

கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று செயற்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சதித் திட்டம்

பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே சந்தேகிக்கப்படும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்த சதிக்கு பின்னால் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த டோகர் என்ற நபருடன் ஏகே 47 களை வாங்குவதற்கு தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என சந்தேகிக்கப்படும் நான்கு பேரிடமும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment