பாராளுடன்றத்திற்கு பேச்சுக்கு வருமாறு கூறியதை அடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவரை இடமாற்றம் செய்ய மருத்துவ மாபியாக்கள் முயல்வதாக தெரிவித்து, தென்மராட்சி மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் 5 பேரை மருத்துவமனை தங்கும் விடுதிக்கு அழைத்து பேச்சு நடத்திய போதே இதனை தெரிவித்தார்.
மருத்துவமனை சிக்கலை சுமுகமாக தீர்க்க பொலிசார் தீவிர முயற்சியெடுத்த நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
தன்னை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக மீண்டும் நியமித்தால், மீண்டும் அதை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் மருத்துவ சேவையிலிருந்து விலகி வெளிநாடு செல்வதை பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment