கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திருமணமான புதுமணப் பெண்ணுக்கு 15-வது நாளில் ஆண்குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த அஜீஸ் என்பவருக்கும், தருமபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
கணவரின் ஊருக்கு வந்த பர்வீன் பானு, கடும் வயிற்று வலி இருப்பதாகக் கூறி, அஜீஸுடன் சரிவர பேசாமல் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிமானதாகக் கூறியதையடுத்து பர்வீன் பானுவை அரசு மருத்துவமனையில் அஜீஸ் அனுமதித்தார். பர்வீன்பானுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.
இதனை கேட்ட அஜீஸ் கடும் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டிய சூழலில்,மருத்துவமனையில் இருந்து அஜீஸ் சென்றுவிட்டதால், பர்வீன்பானுவின் உறவினர்களை அழைத்துப் மருத்துவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த திருமணம் செய்து வைத்தது குறித்து பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் மீது அஜீஸ் காவல்நிலையத்தில் புகாரளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tuesday, October 23, 2018
Home »
» கிருஷ்ணகிரி அருகே திருமணமான 15-வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை: அதிர்ச்சியில் கணவர்
கிருஷ்ணகிரி அருகே திருமணமான 15-வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு ஆண்குழந்தை: அதிர்ச்சியில் கணவர்
Related Posts:
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job
0 comments:
Post a Comment