தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் என கூறப்படும் இளைஞனையும் சரமாரியாக கத்தியால் குத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை காவல்துறையால் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதான ஒரு குழந்தையின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை இலுக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான அந்நபரின் மனைவி, அதே பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனுடன் உரையடிவருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த இளைஞன், வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் உரையாடி கொண்டிருந்த வேளை சந்தேக நபர் இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கள்ளக்காதலன் என கூறப்படும் இளைஞனை தனது கணவர் கத்தியால் குத்தும் போது அதனை தடுக்க முயன்ற மனைவி மீதும் கத்தி குத்து இடம்பெற்றுள்ளது.
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞனும், மனைவியும் மாவனெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் உடலில் 15 வெட்டு காயங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

0 comments:
Post a Comment