சில மணி நேரங்களில் சிந்து என்ற பெயர் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் ஆர். சுரேஷ்பாபு என்பவர் பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஜெயகுமார் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சிந்து யார்? அவருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையேயான பழக்கம் குறித்து சிந்து தரப்பு கூறிய தகவல்கள்…
சென்னை ராயபுரம் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சிந்து. அவரை பலர் பெண் பார்க்க வந்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் குடும்பமே விரக்தியில் இருந்தது. இதையடுத்து சிலரின் யோசனையால் திருமண தடை நீங்க கோவளம் அருகே மந்திரிக்கும் ஒரு முஸ்லிமிடம் அவரது தாய் அழைத்துப் போயிருக்கிறார். அவர் பில்லிசூனியம் மாதிரி இருக்கிறது இதை சரி செய்ய நிறைய செலவாகும் என்று கொஞ்சம், கொஞ்சமாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். ஆனால் மாதங்கள் பல கடந்தும் பலன் ஏதுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிந்துவின் தாய் பணத்தைத் திரும்ப கேட்க அந்த நபர் தர மறுத்திருக்கிறார். இதையடுத்து தனது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாரை மகளுடன் சென்று பார்த்திருக்கிறார்.
அமைச்சர் சரிம்மா நான் பேசி பணத்தைத் திரும்பத் தர ஏற்பாடு பண்றேன்’ என்று உறுதி அளித்திருக்கிறார். இது சம்பந்தமாக பல முறை தாயும், மகளும் அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்துள்ளனர். ஒருநாள் சிந்துவிடம் போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், ‘உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வாம்மா… இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. இங்கேயே பேசி முடிச்சு பணத்தை வாங்கிக் கொடுத்துடறேன்’ என்று சொல்ல சிந்து எங்கம்மா இப்ப வீட்ல இல்ல. நான் மட்டும்தான் இருக்கேன். அதனால வர முடியாது’ என்று மறுத்திருக்கிறார்.
ஆனால் ஜெயக்குமார் அழுத்தம் தர சிந்து மட்டும் தனியே அமைச்சர் வீட்டுக்கு போயிருக்கிறார். அது தான் இருவரின் முதல் ‘ சந்திப்பு ’ என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள். தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்திருக்கிறது. பெரும்பாலும் மதிய வேளையில் தான் அமைச்சரை சிந்து சந்திருக்கிறார். இப்படியாக சில மாதங்கள் சென்ற நேரத்தில்தான் அரவக்குறிச்சி மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அங்கே ஜெயக்குமாரும் முக்கிய பொறுப்பாளர். திடீரென ஒருநாள் ஜெயக்குமாரிடம் இருந்து போன் வர ஒரு முடிவோடு கிளம்பியிருக்கிறார் சிந்து. ஜெயக்குமார் சொன்னபடி திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் புக் செய்யப்பட்டிருந்த அறை எண் 219ல் நவம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை அவரோடு தங்கியிருக்கிறார். இவ்வாறு தொடர்ந்த தொடர்பால் சிந்து கர்ப்பமானார். இதை அவரிடம் சொல்ல, கருவை கலைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார் ஜெயக்குமார். ஆனால், அதற்கு மறுத்து திருமணம் செய்ய சொல்லி போராடிக் கொண்டிருந்த காலத்தில் குழந்தையும் பிறந்து விடுகிறது. அரசு மாறிய பிறகு ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கலாம் என்று நினைத்திருக்க, ஜெயக்குமார் தரப்பினரின் தொடர் மிரட்டலால்தான் விஷத்தை வெளிப்படுத்தினர் தாயும் மகளும் என்கின்றனர் சிந்து தரப்பினர். இந்த விவகாரம் அனைத்தையும் மறுத்த அமைச்சர் ஜெயக்குமாரின் விளக்கம் அனைவருக்கும் தெரிந்தது தானே…
-ஜார்ஜ்
0 comments:
Post a Comment