புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம்க டுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார் டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
கடுமையானகாயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்பொழுது வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைபெற்று வருகின்றார்கள்.
தமிழ் வாழிபாட்டு எதிர்ப்பாளர்களும், சாதிய வெறியர்களுமே அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கின்றார்,
0 comments:
Post a Comment