அநுராதபுரம்(anuradhapura) ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நான்கு குழந்தைகளுடன் தாய், தந்தை என அறுவர் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி காட்டுக்குள் மரம் ஒன்றில் குடிசை கட்டி வாழ்ந்து வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga) அந்த குடும்பத்திற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த குடும்பம் வசிக்கும் வீடு தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அவதானித்த அமைச்சர், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சிக்கு இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
நிரந்தர வீடொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
இதன்படி இந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல் அறிக்கைகளை வழங்குமாறு அனுராதபுரம் மாவட்ட முகாமையாளருக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரத்தில் கட்டப்பட்ட மற்றுமொரு குடிசையிலும்
மூன்று மகன்களை பெற்ற தாய்,, கணவன், மற்றுமொரு பெண் குழந்தை ஆகிய அறுவரும் பகலில் குடிசையிலும் இரவில் பாதுகாப்பு கருதி மரத்தில் கட்டப்பட்ட மற்றுமொரு குடிசையிலும் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment