இன்றைய நிகழ்வில் எதிர்பாராத விருந்தாளியொருவரால் அங்குள்ளவர்கள் திக்குமுக்காடியுள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற பொப்பிசை பாடகி மாயா அருள்பிரகாசம் கூட்டத்திற்கு நேரில் வந்திருந்தார். முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் கூட்டத்தில் தான் நேரடியாக கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியதாகவும், அதனாலேயே நேரில் வந்ததாகவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் தனது கட்சியின் பெயரை அறிவித்ததும், மாயா மேடைக்கு சென்று முதலமைச்சரை வாழ்த்தினார்.
மாயா அருள்பிரகாசம் உலகப்புகழ் பெற்ற பொப்பிசை பாடகியாவார். லங்கா ராணி என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவருமான அருளர் என்ற அருள்பிரசாசத்தின் மகளே மாயா ஆவார். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மாயா, ஏராளம் இசை அல்பங்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை, மனிதஉரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாயா, இது குறித்த அசை அல்பங்களையும் வெளியிட்டிருந்தார்.
0 comments:
Post a Comment