மெக்சிகோவில் விடுமுறையை கழிக்கச் சென்ற மூன்று பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், அவர்களின் கொலைக்கு பின்னால் இருக்கும் காரணம் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளையர் சிலருடன்
அவுஸ்திரேலியரான சகோதரர்கள் Callum (33) மற்றும் Jake Robinson (30), அமெரிக்கரான 30 வயது Jack Carter Rhoad ஆகிய மூவரும் என்செனாடா நகரின் தெற்கே உள்ள ஒரு ஆள் ஆரவாரமற்ற பகுதியில் முகாம் அமைத்து தங்கியிருந்துள்ளனர்.
Chilling Reason Holidaying Surfers Killed
இந்த நிலையிலேயே இவர்கள் கொள்ளையர் சிலருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜா கலிபோர்னியாவில் உள்ள சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், டயர்களை குறிவைத்த திருடர்கள் அவர்கள் டிரக்கைத் திருடுவதற்காக அவர்களைக் கொன்றனர் என்று தெரிவித்துள்ளனார்.
அத்துடன், அந்த உடல்களை கடற்கரைக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்து ஒருவழியாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உறவினர்களும் தற்போது உடல்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலையில் சுடப்பட்ட நிலையில்
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 4 மைல்கள் தொலைவில் அந்த கிணறு அமைந்துள்ளது.
மேலும், அழுகிய நிலையில் 4வது சடலம் ஒன்றும் அந்த கிணற்றில் இருந்து மீட்கபட்டுள்ளது.
Chilling Reason Holidaying Surfers Killed
வெளிநாட்டவர்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதாகியுள்ளனர். மூன்று சுற்றுலாப்பயணிகளும் தலையில் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, உடல்கள் மீட்கப்பட்ட அந்த கிணறானது அந்த கொள்ளையர்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கலாம் என்றே சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment