நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, May 16, 2024

இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல் | India Srilanka Boat Service Will Be Start On 19


இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 17 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டநிலையில் மீண்டும் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம்

அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் குறித்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment