தளபதி விஜய்யின் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். இந்த திரைப்படம் விரைவில் வெளிவரவேண்டும் என, உலகம் முழுதும் உள்ள தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர்.
எனினும் சர்க்கார் திரைப்படத்திற்கு தொடர்ந்தும் பல எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றன. இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், பிறிதொரு மனுவொன்றும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment