Saturday, January 4, 2025
கனடாவில் வவுனியா டிலக்சன் கார் கதவு திறக்காததால் மூச்சு திணறி மரணம்!!
கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது -20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Friday, January 3, 2025
கிளிநொச்சியில் நிறை வெறியில் கொலைசெய்த சாரதி!! கட்டப்பட்டுள்ள நீதி தேவதையின் கண்கள் அவிழ்க்கப்பட வேண்டும்!!
கிளிநொச்சியில் நிறை வெறியில் கொலைசெய்த சாரதி!! கட்டப்பட்டுள்ள நீதி தேவதையின் கண்கள் அவிழ்க்கப்பட வேண்டும்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
தாய் தந்தை இரண்டு மகள்கள் என அழகான குருவி கூடு போல் இருந்த வாழ்வை நாசமாக்கிவிட்டீர்களே. சில சாரதிகளின் பொறுப்பற்றத் தனத்தால் இப்படி எத்தனை சம்பவங்கள்.
விறகு வெட்டி அதனை ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து துவிச் சக்கர வண்டியில் கிளிநொச்சி நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்து அதில் தனது மகளை கற்பித்து தனது குடும்பத்திலிருந்து முதல் முதலாக உயர்தரம் படிக்க கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுப்பிய தந்தை தனது பிள்ளை எதிர்காலத்தில் உயர்ந்த இடத்திற்குச் செல்லும் என்ற கனவோடு இருந்த போது முதல் நாள் பாடசாலை பயணத்தையே மஞ்சல் கோட்டில் இறுதிநாளாகவும் மாற்றினார் அன்று ஒரு சாரதி.
இந்த சம்பவத்தையும் நாம் ஒரு சில மாதங்கள் பேசினோம், முகநூலில் முழங்கினோம், ஆர்ப்பாட்டம் செய்தோம் கடந்து சென்றுவிட்மோம். எதுவும் நடக்கவில்லை ஆனால் அதே வீதியில் விபத்துக்கள் மட்டும் தொடர்ந்தும் நடக்கிறது.
இப்போது அந்த தந்தையும் உயிரோடு அவர்களுக்கு நீதி கிடைத்ததா என்றும் தெரியவில்லை. ஆனால் சாரதி இப்போது தனது வழமையான பணிகளில் இருப்பார் என்றே கருதுகிறேன். இப்போது அந்த சாரதி தனது பிள்ளையின ்படிப்பில் அக்கறையோடு இருப்பார்.
இந்த சம்பவமும் இப்படிதான் கடந்து சென்றுவிடும், சாரதி பிணையில் வந்துவிடுவார். வழக்குகள் நடக்கும், நீதிமன்றம் சாட்களையும், ஆதாரங்களையும் கோரும், சில சட்டத்தரணிகள் அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி இரண்டு உயிர்களை கொலை செய்த சாரதிக்கு வாகனம் ஓடவே தெரியாது, அது அவர் இல்லை என்றும் வாதிடலாம். கண்களை கட்டிக்கொண்டிருக்கும் நீதி தேவதைக்கு இவை ஒன்றும் தெரியப்போவதில்லை.
உண்மை எங்கோ ஒரிடத்தில் இவற்றை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்.
ஆனால் அந்த குடும்பத்தில் கணவன் தனது அன்புக்குரிய அழகான இளம் மனைவியையும் பாசத்திற்குரிய அழகான குழந்தையையும் இழந்து துடித்துக்கொண்டிருப்பார்.
ஆறு வயது சிறுமி தனது உயிர் அம்மாவை இழந்து அம்மாவின் அரவணைப்பை இழந்து, தனது பாசத்திற்குரிய தங்கையையும் இழந்து வெறுமையாய ் நிற்கும்.
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஒரு சில நாட்கள் கூடி நின்று ஆறுதல் சொல்வார்கள் பின்னர் எட்டுச்செலவு 31 ஆம் நாட்கள் கடந்துசெல்ல அவர்களும் தங்களின் வழமையான பணிகளுக்குத் திரும்பி விடுவார்கள்.
தந்தையும் மகளும் தனி மரங்களாக ஏக்கங்களோடு தனித்திருந்து தவித்துக்கொண்டிருப்பார்கள். விட்டுச் சென்ற இருவரின் கடந்தகால நினைவுகள் அவர்களை வாட்டி வதைக்கும்.
சில வேளை நாங்கள் இப்படியான இன்னொரு விபத்தை பற்றி பேசிக்கொண்டிருப்போம். இந்த சாரதியும் பிணையில் வந்து தனது குடும்பம் பிள்ளைகளோடு பயணித்துக்கொண்டிருக்கலாம்.
காலம் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். இதே வீதியில் விபத்துக்களும் நடந்துக்கொண்டிருக்கும. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற விளம்பர பலகைகள் மட்டும் வீதிகளில் தொங்கிக்கொண்டிருக்கும்.
யாழில் இளங்குமரன் இரவு வேளை தெருவில் நடாத்திய அதிரடி தாக்குதல்!!
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த சம்பவம், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை அகழ்ந்து செல்லப்படுவதாக பிரதேச மக்களால் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
மக்களின் முறைப்பாட்டையடுத்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, நேற்றையதினம் இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
Thursday, January 2, 2025
கிளிநொச்சி கோர விபத்தில் யாழ் இளம் தாய் யாழினியும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!
கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது .தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் இன்றைய தினம் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, January 1, 2025
யாழ் பொலிசாரின் கண்காணிப்பில் ஜே.வி.பி மற்றும் இராணுவப் புலனாய்வு ஆதரவாளர்களால் அப்பாவி மீது கொடூரத் தாக்குதல்!!
யாழ் பொலிசாரின் கண்காணிப்பில் ஜே.வி.பி மற்றும் இராணுவப் புலனாய்வு ஆதரவாளர்களால் அப்பாவி மீது கொடூரத் தாக்குதல்!!
இன்று அதிகாலை யாழ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் யாழ் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் இஷாரா புடவையை கடைக்கு முன்பு மது போதையில் நின்று நடனமாடிய குழு ஒன்று வீதியால் சென்ற இளைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டனர்.
ஆடைகள் களையப்பட்டு கொலை செய்யும் நோக்கோடு இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயற்சித்த மட்டக்களப்பு பிரதேச இளைஞனும் தாக்கப்பட்டார் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் தெல்லிப்பழை ஆதாரத் வைத்திய சாலையிலும் மற்றவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களை யாழ் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த ரவுடியான வசி என்பவரின் மகனும் அவரின் இரண்டு மருமக்களும் இன்னும் சில ரவுடிகளுமே தாக்கியுள்ளார்கள் இது தொடர்பாக இதுவரை யாருமே கைதுசெய்ய படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இராணுவப புலனாய்வாளர்களுடன் நெருங்கிப் பழகி வருபவர்கள் என்பதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போது ஜே.வி.பி கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தவர்கள் என அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மகிந்தவுக்கு புலிகளால் அச்சுறுத்தல் இல்லை – எனக்கு அச்சுறுத்தல் இல்லையா..?
மகிந்தவுக்கு புலிகளால் அச்சுறுத்தல் இல்லை – எனக்கு அச்சுறுத்தல் இல்லையா..?
புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் எதுவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘மகிந்த ராஜபக்சவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை.போர் இடம்பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலை நடத்தவோ இல்லை.
மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கினர்.
அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? வெலிகடை சிறையில் என்னை அடைத்த தருணத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்தார்.அத்தருணத்தில் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை.பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்தில்,
இராணுவத் தலைமையகத்தில் என்மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தவந்திருந்த மொரிஸ் என்ற நபரும், நானும் ஒரே வாங்கில் தான் அமர்ந்திருந்தோம்.அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒருபோதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள்.மகிந்த ராஜபக்ச பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவே ஆட்சிக்கு வந்தார். போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்தமொன்றையும் அறிவித்தார்.
பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார். போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் தூரம் வரை பின்னோக்கி நகரும் நிலை ஏற்பட்டது.மகிந்த ராஜபக்ச புலிகளுடன் நெருங்கிய உறவை பேணியிருந்தார். அதனால் புலிகளால் அவரது உயிருக்கு ஒருபோதும் ஆபத்து இல்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனது குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தற்கொலை செய்த தாய்!! எதற்காக? விசாரணைகள் ஆரம்பம்!!
தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.
சந்தேகத்திற்குரிய தாயார், குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டியதோடு, தனது உடலிலும் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் 39 வயதுடைய தாயும், 2 வயது 9 மாத பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (31) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர் பிந்துன்கட பிரதேசத்தில் உள்ள மகளிர் சங்கத்தின் பொருளாளராக கடமையாற்றியதாகவும், பணப்பிரச்சினை காரணமாக சிறுமியை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவரது கணவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job