ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்டு வரும் செய்தி!
யாழ்ப்பாணத்தில் தாயார் படிக்குமாறு கூறியதால் தவறான முடிவெடுத்து மாணவி ஒருவர் உயிர் மாய்த்தார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் தவறுதலாக பகிரப்பட்டு வருகின்றன.
அதன் உண்மை நிலை என்னவெனில்
குப்பைக்கு தீ வைக்கும் போது தவறுதலாக உடையில் தீப்பற்றியதால் சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகியதாக வீட்டார் தெரிவிக்கின்றனர். தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல் திரிவு படுத்தப் பட்டவையென்றும், உண்மைக்குப் புறம்பானவையென்றும் தெரிவிக்கப் படுவதுடன் சிறுமியையிழந்து மீளாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு போலியான தகவல்கள் இன்னும் வலிகளை ஏற்படுத்துவதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்
சம்பந்தப்பட்ட சிறுமி
தீக்காயங்களுடன் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உயிரிழந்த சிறுமி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியென்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment