டென்மார்க்கிலிருந்து ஜேர்மன் வந்து 43 வயது கிருசாந்தியுடன் வவுனியா குணசீலன் ஜல்சா! நேரில் கண்டு தாக்கிய கணவனுக்கு சிறை! நடந்தது என்ன?
ஜேர்மன் ஹம்பேர்க் பகுதியில் தமிழ் செயற்பாட்டுக் கழகம் ஒன்றின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட 52 வயதான ஒருவர் அண்மையில் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு StGB §224 – Gefährliche Körperverletzung அடிப்படையில் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தினரை கடுமையாக தாக்கிய குற்றம்
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருசாந்தியின் வீட்டுக்கு வந்த டென்மார்க்கைச் சோ்ந்த 36 வயதான வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் குணசீலனையும் கிருசாந்தியையும் கேக் வெட்டும் கத்தி மற்றும் இரும்பு கேடர் போன்றவற்றால் அடித்தும் குத்தியும் காயப்படுத்தியுள்ளார் கிருசாந்தியின் கணவர். இதில் கிருசாந்தி தலையில் வெடிப்புக் காயத்துடனும் குணசீலன் முகம் மற்றும் தோள்மூட்டுப்பகுதியில் கத்திக் குத்துக் காயத்துடனும் கிருசாந்தியின் வீட்டிலிருந்து பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
கள்ளத் தொடர்பு என கணவன் கொடுத்த வாக்குமூலம்
இருவர் மீதும் தாக்குதல் நாடத்திய கிருசாந்தியின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் கணவர் தான்தான் தாக்கியதாக ஒப்புக் கொண்டார். வேலைத்தளத்திலிருந்து திடீரென வீட்டுக்கு வந்த போது தனது மனைவியும் இனந்தெரியாத ஒருவரும் அந்தரங்கமாக காணப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தால் தாக்கியதாக கணவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். ஆனால் மனைவி மற்றும் காயப்பட்ட குணசீலன் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குணசீலன் மனைவியின் சமூகவலைத்தள நண்பன் எனவும் குணசீலனுடன் தான் தொடர்பு கொள்வதில் கணவன் கடுமையாக எச்சரிக்கை விட்டுவந்ததாகவும் கிறீஸ்மஸ் விடுமுறைக்கு குணசீலன் தன்னை நட்புரீதியாக சந்திக்க வந்த நேரத்தில் அது தொடர்பாக அறிந்து கணவன் பல கண்காணிப்புக்களை ஏற்படுத்தி குணசீலன் வீ்ட்டுக்குள் வந்து நின்ற நேரத்தில் திட்டமிட்டு அங்கு வந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்ததால் கிருசாந்தியின் கணவருக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. கணவன் மீது முன்னர் எந்தவொரு குற்றச் செயல்கள்களுக்கான புகார்களோ அல்லது தண்டனைகளோ இல்லாத காரணத்தால் அவருக்கான சிறைத் தண்டனை குறுகிய காலமாகக் குறைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை கிருசாந்தியின் 19வயது மற்றும் 16 வயதான இரண்டு ஆண் பிள்ளைகளும் தற்போது தந்தையுடனேயே வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment