வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நீச்சல் இளவரசி விபரீத முடிவு!
வெள்ளத்தின் போது தனது அண்டை வீட்டாரின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட சேதவத்தையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நேற்று முன்தினம் (10) உயிரிழந்துள்ளார்.
“களனி நதியின் இளவரசி“ என செல்லமாக அழைக்கப்பட்ட, சேதவத்தை, கோட்விலவைச் சேர்ந்த ஓஷாதி வியாமா (19) என்பவரே காலமானார்.
கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்த அவர், பாடசாலை கல்விக்கு பின்னர் சமூக பணிகளில் ஈடுபட்டார். சமீபத்திய வெள்ள அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரணப்பொருட்கள் வழங்கவும் இரவு பகலாக செயற்பட்டார்.
ஓஷாதி தனது 3 வயதிலிருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். எனினும், முதலைகள் மீதான பயத்தால் களனி நதியில் இறங்குவதில்லை.
பின்னர், ஓஷாதி தனது 7 வயதில் 14 நிமிடங்கள் 41 வினாடிகளில் களனி ஆற்றின் குறுக்கே 1000 மீட்டர் நீந்தி சாதனை படைத்தார். அவர் சாதனை படைத்ததைக் காண கிராமவாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அன்று களனி ஆற்றின் இருபுறமும் கூடியிருந்தனர்.
அவர் ஏதோ ஒரு நோயால் அண்மைக்காலமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.






0 comments:
Post a Comment