நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, December 17, 2025

மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?


மட்டக்களப்பில் தவராசா பிட்டுக் கேட்டதால் மனைவி கொன்றாளா? உண்மையில் நடந்தது என்ன?

சமூகவலைத்தளப் பதவினை அப்படியே தந்துள்ளோம்….

மட்டக்களப்பு வாகனேரிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (15) காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனான தவராசாவை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ளதாக வெளியாகிய செய்தின் உண்மை என்னவெனின்

தவராசா போதைக்கு அடிமையானவர் என்பதுடன் போதையில் மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பல தடவைகள் பொலிசாரிடம் மனைவி முறையிட்டு பொலிசாரும் தவராசாவை எச்சரித்து வந்துள்ளார்கள். இறுதியாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் தவராசாவின் சித்திரவதை தாங்காத மனைவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று இனிமேல் நான் உங்களிடம் வருவது என்றால் அவனைக் கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னரே மனைவி தவராசாவை கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி

தான்மீதான நீண்ட நாட்களாகிய கணவரின் துன்புறுத்தல் தான் பெண்ணை அந்த பொறுமை இழந்த செயலுக்கு இட்டுச் சென்றிருப்பதாக அறிய முடிகிறது

இதற்கான பிரதான காரணம் என்னவென்று பார்த்தால் கணவன் அருந்தும் மதுபோதையே பெண்ணை தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னும் கணவரால் தான் துன்புறுத்தப்படுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தரவிடில் அடுத்த முறை நான் இங்குவரும் போது
கணவரை கொலை செய்துவிட்டுத்தான் வருவேன் என அவர் சொன்னதாகவும் அறிய முடிகிறது.

கடந்த காலத்தில் கணவரால் தொடர்ந்து தாக்கப்பட்டதால் காது கேளாது போயுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

எந்த அளவுக்கு தான் கணவரால் தொடர்ந்து துன்பப்பட்டிருப்பார் இந்த செயலை செய்யும் மனநிலைக்கு மாறுவதற்கு என்று நினைத்து பார்த்தால் ஒவ்வொரு கணவர்களும் தங்கள் மனைவிகள் மீது அதித அக்கறை கொள்ள வேண்டும் என சொல்ல வேண்டியுள்ளது.

ஆனாலும் கணவர் பொதுப்பார்வைக்கு ஏன் என்பார்வைக்கு கூட அமைநியான நபராகவே அல்லுத்தொல்லுக்கு போகாத நபராகவே பார்க்கப்பாட்டார்
ஆனால் அவரை மதுபோதைதான் இந்த நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதை அறியும் போதுதான் அவரின் நிலைமை அறிய முடிகிறது

குறித்த சம்பவத்தினை பொதுவாக நாம் எப்படி பார்க்கின்றோம் என்பதைத் தாண்டி, கணவன் மனைவி மீது கவனத்துடனும் மனைவி கணவன் மீது கண்ணியத்துடனும் இணையான வாழ்வில் பரஸ்பர விட்டுக் கொடுப்போடு அதிக அழுத்த திணிப்புகளை தவிர்த்து வாழ இருவருக்கும் இடையே நம்பிக்கையும்
இருவருக்கிடையே மனநிறைவான புரிந்துணர்வுடன் வாழ தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு வாழ்வை நகர்த்தும் போதுதான்.

தாம்சார்ந்த குடும்பத்தில் உள்ள சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் தாங்கி கொள்ளும் தருணத்தில் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத் தேடல் சிறப்பாக அமையும் காலத்தை நெருக்கும் போது புதுமை காலத்தை அன்னியோன்னியத்துடன் களிக்க கைகொடுக்கும்.

இல்லையெனில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பம் இன்று இருபிள்ளைகளை அப்பா இல்லாது. அம்மா சிறையிலும் உள்ள நிலையில் மணமுடித்த இருபிள்ளைகள் ஒருபுறமும் எதிர்கால கனவுகளை சுமக்கும் இருபிள்ளைகள் துணையாக யாருமில்லாத நிலைமைக்கும் தள்ளப்பட்டதை போன்ற வாழ்வையே மதுபோதை தந்துவிடலாம் நம்மில் பலருக்கு.

ஆக கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள சண்டை சச்சரவுகள் நான்பெரிது நீபெரிது நீசெய்வது பிழை நான் செய்வது சரியென எழும் பேச்சை இருவருக்குமான அறைக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முனையும் போதுதான் வாழ்க்கை எனும் காலத்தின் அத்தியாயத்தை புரட்டி கண்ணியத்தோடு நகர்ந்த வழிவகை செய்யும் மாறாக ஈட்டிக்கு போட்டியாக பேச நினைத்தால் .

வாகனேரியில் பிட்டு பிரச்சனையில் ஆணில் உயிர் போனது போல் இன்னுமொரு ஊரில் பிரிதொரு விடையத்தின் காரணத்தால் கணவனையோ மனைவியையோ தாய் தகப்பன் இழக்க ஒன்றுமே அறியாத பிள்ளைகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறலாம்,!

Moorththy Dinu

0 comments:

Post a Comment