யாழ் பிரபலசட்டத்தரணியை நிர் வாணமாக்கி பரிசோதித்த நதியாஸ்!! பரபரபரப்பு தகவல் இதோ
யாழ் நகரில் புதிதாக திறக்கப்பட்ட நதியாஸ் நிறுவனத்திற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் முகாமையாளரால் நிர் வாணப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உள்ளானதை அங்கு சென்ற பலரும் அதிர்ச்சியாகப் பார்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த சட்டத்தரணி இன்று காலை 10 மணியளவில் நதியாஸ் நிறுவனத்திற்கு ஆடைகள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் உள்ளே நுழைந்து ஆடைகள் வாங்கி பணம் செலுத்திய பின் வெளியேறிய போது வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கருவி எச்சரிக்கை செய்துள்ளது. அதன் காரணமாக அங்கு பாதுகாப்பு கடமையில் நின்ற செக்குறுட்டி (யாழ் போதனாவைத்தியசாலையில் உள்ளது போன்றே கடுமையானவர்களாக காணப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது) சட்டத்தரணியை பின்தொடர்ந்து சென்று அழைத்து வந்து பலருக்கும் முன் கள்ளனைப் போல் நடத்தியதாக அங்கு நின்ற பலரும் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.
தன்னை எதற்காக அழைத்து வந்து பரிசோதிக்க முற்படுகின்றீா்கள் என சட்டத்தரணி கேட்ட போது ”வெளியே செல்லும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்தது” என கூறி கள்ளனைப் போல் சட்டத்தரணியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளார்கள். அதற்கு அந்த சட்டத்தரணி ”நான் உள்ளே வரும் போதும் இவ்வாறு சத்தம் கேட்டது” என கூறியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது சட்டத்தரணியை மறைவான இடத்துக்கு பலரும் பார்க்கத்தக்கதாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த ஆடைகளை களைந்து பரிசோதி்த்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சட்டத்தரணி எந்திவித பொருட்களையும் திருடவில்லை என்பதை பரிசோதித்து அறிந்த குறித்த நதியாஸ் நிர்வாகம் அவரை மீண்டும் செல்ல அனுமதித்துள்ளது. சட்டத்தரணியை கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேலாக குறித்த நிர்வாகத்தினர் பரிசோதித்து விசாரணை செய்தது அங்கு சென்றவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமது நிறுவனத்திற்குள் புகுந்த ஒரு நபர் தமது பொருட்களை திருடினாரா என்பது தொடர்பாக எச்சரிக்கை கருவி எச்சரிக்கை செய்திருந்தால் அவரை பரிசோதிப்பதிலும் பார்க்க குறித்த நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களைப் ஆராய்ந்து அவரது செயற்பாட்டை பார்த்த பின் அவர் தவறு செய்திருந்தால் அவரை பரிசோதிக்கலாம்… ஆனால் இப்படி ஒரு சட்டத்தரணியையே இவ்வாறு கேவலப்படுத்தியவர்கள் இனிவரும் காலம் யாழ்ப்பாண மக்களை மடையர்கள் என நினைத்து செயற்படப் போகின்றார்களா?
குறித்த நிறுவனம் தன்னை அவமானப்படுத்தியது தொடர்பாக சட்டத்தரணி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குறித்த சட்டத்தரணி யார் என்பது தொடர்பாகவும் அவர் பரிசோதனை செய்யப்பட் விதம் தொடர்பாகவும் எம்மிடம் அனுப்பப்ட்ட காணொளி உள்ளது. இருப்பினும் சட்டத்தரணி தன்னை அவமானப்படுத்தியமைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காவிடின் அந்த காணொளியை நாம் பிரசுரித்து சட்டத்தரணிக்கு பொறுமையின் சிகரம் என்ற வாழ்த்துடன் கூடிய பட்டத்தை அளித்து பதிவினை நாம் நிச்சயம் வெளியிடுவோம்.






0 comments:
Post a Comment