யாழில் ஐயருடன் 57 வயது கனடா அன்ரிக்கு கள்ளக்காதல்? அடிக்கடி தலை சுற்று என கூறி அப்பாவிக் கணவனை ஏமாற்றியத எப்படி?
யாழ் தென்மராட்சிப் பகுதியில் கிராமிய ஆலயம் ஒன்றில் பூசாரியாக உள்ள 34 வயது பூசாரியுடன் கனடாவிலிருந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் அந்தரங்கத் தொடர்பில் இருந்து வருகின்றார். இது தொடர்பாக பூசாரியின் மனைவி பத்திரகாளியாக மாறியும் குறித்த குடும்பப் பெண்ணை பூசாரியிடமிருந்து துரத்த முடியவில்லை என தெரியவருகின்றது.
ஆலயத்துடன் சேர்ந்து இருக்கம் மடப்பள்ளியிலேயே தற்போது பூசாரியும் கனடா குடும்பப் பெண்ணும் தங்கியுள்ளர்கள். குறித்த பெண்ணுக்கு தலைச்சுற்று உள்ளதாக கூறி அதற்கு பரிகாரம் செய்வதற்காக கோவிலிலேயே தங்க வேண்டும் எனத் தெரிவித்தே குடும்பப் பெண்ணை பூசாரி கோவில் மடப்பள்ளியறையில் தங்க வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. பூசாரியி்ன் திருவிளையாடல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த மனைவி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் அது தொடர்பாக கனடாவிலிருந்து வந்த குடும்பப் பெண்ணின் கணவரிடமும் தனது கணவரின் லீலைகள் தொடர்பாக கூறியுள்ளார். இருந்தும் அதனைக் குடும்பப் பெண்ணின் கணவன் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. இதனையடுத்து தொடர்ச்சியாக கோவிலுக்கு சென்று மனைவி ரகளையில் ஈடுபட்டு வருவதுடன் தற்போது நடைபெறும் திருவெம்பாவை பாடல்களை அப்பகுதியில் குடியிருபவர்கள் அங்கு வந்து படிப்பதற்கும் தடங்கல்கள் ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இருப்பினும் குறித்த பூசாரிக்கு சில நோய்களைத் தீர்க்கும் வல்லமை உள்ளதாகவும் கனடாவிலிருந்து வந்த பெண் பார்ப்பதற்கு இளமையானவராக இருந்தாலும் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்காது பூசாரியின் மனைவி சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் அப்பெண்ணை ஏசிவருவதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment