பிரபல பாடசாலையில் விடுதியில் உடற்கல்வி பாட ஆசிரியருடன் வசமாக சிக்கிய மூவர்!
மொனராகலை – செவனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் வைத்து போதைப்பொருளுடன் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபரான விளையாட்டு ஆசிரியர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விளையாட்டு ஆசிரியர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் செவனகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments:
Post a Comment