சற்று முன் டக்கர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது!! பாதாள உலக கும்பலுக்கு துப்பாக்கி விநியோகம்!!
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.






0 comments:
Post a Comment