கனடாவில் தனது அம்மாவிடம் இனந்தெரியாத அங்கிள் வந்து செல்வதாக தந்தையிடம் முறையிட்ட 13 வயது மகள் மீது தாக்குதல்!! தமிழ் குடும்பப் பெண் கைது!!
கனடா ஒன்டாரியோ மாநிலத்தில் தனது 13 வயது மகளை மோசமாகத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காக இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமனறில் ஆயர்ப்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. இவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதுடன் மகளை தந்தையுடன் வசிப்பதற்கு custody order அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட விசாரணை மற்றும் புலனாய்வின் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தாயாரிடம் இனந்தெரியாத ஆண் ஒருவர் தந்தை இல்லாத சமயங்களில் வந்து செல்வதாக மகளால் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே தாயார் மகளை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. தந்தை மற்றும் மகள் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 38 வயதான இலங்கைத் தமிழ்க் குடும்பப் பெண் மீதே நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது






0 comments:
Post a Comment