உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தங்க விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28) திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, 24 கரட் தங்கம் 1 கிராம் - 46,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் 8 கிராம் - 370,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் 1 கிராம் - 42,400 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 8 கிராம் - 339,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கமைய, 21 கரட் தங்கம் 1 கிராம் - 40,500 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் 8 கிராம் - 324,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணி
இதேவேளை, தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் சர்வதேச அமைப்பான உலக தங்க கவுன்சில் அமைப்பின் சிஇஒ டேவிட் டெயிட், தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.
Changes In The Price Of Gold In The World Market
தங்கத்தை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் 22 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமிப்பது, சீனாவில் தங்கத்துக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவது, ஜப்பானில் நிலவும் பணவீக்கத்தால் மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, நிதிநிலையற்ற தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை தங்கம் விலை ஏறுவதற்கான முக்கிய காரணமாக கணித்துள்ளது






0 comments:
Post a Comment