Thursday, November 30, 2023
தங்கத்தின் விலையில் இன்று பதிவான மாற்றம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (01.12.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 669,046.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 670,385 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,650 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 189,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 173,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,700 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
சுயகற்றலால் உயர்ந்த மாணவி
மாணவியின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் எனவும், சில சிக்கல் நிலைகள் காரணமாக வீட்டில் இருந்து சுயகற்றல் மூலம் மாணவி பரீட்சைக்குத் தோற்றியதாக மாணவியின் தாயார் எம்மிடம் தெரிவித்தார்.
மேலும், குறித்த மாணவி சதுரங்க போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும், ஆறு நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.
அத்துடன், பல துறைகளில் தான் தடம் பதிக்க வேண்டும் எனவும், முடியுமென்றால் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்திற்காக மாணவி காத்திருப்பதாகவும் அவரது தாயார் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கையருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கம் காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தமான் கடல் பிராந்தியத்தின் தென் பகுதியுடனும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துடனும் இணைந்த கடல் பிராந்தியங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த தாழ் அமுக்க பிரதேசமானது மேற்கு ‐ வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது.
இது மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிற்கு மேலாக தாழ் அமுக்கமாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை
இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்
18 வயது வரை தன்னை ஆண் என்று நினைத்து வாழ்ந்த பெண்! 44 வயதில் கூறிய அதிர்ச்சி விடயம்
அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண்ணொருவர் 20 வயது வரை தன்னை ஆண் என்றே நினைத்து வாழ்ந்ததாக அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டவர்
கனெக்டிகட் (Connecticut) எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்மா லின் டவுட் (44). இவர் தனது பெற்றோரால் ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் தன்னை ஒரு பெண் என்பதை அறியாமலேயே 18 வயது வரை ஆண் என்று நினைத்து வளர்ந்துள்ளார். 18 வயதில் கல்லூரி சென்றபோது லாக்கர் அறையில் இருந்த மற்ற ஆண்களின் உடற்கூறியல் உடலமைப்பு மிகவும் வித்தியாசமானது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
அதாவது, பெண் மற்றும் ஆணின் பாலின உறுப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளார் எம்மா. கருப்பை மற்றும் டெஸ்டிகுலர் திசுக்களுடன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடையிடையே இருப்பதைக் கண்டுபிடித்தார்.
us intersex woman believes as boy age 18
எம்மாவுக்கு முதல் மாதவிடாய் வந்து மார்பகங்களை வளரத் தொடங்கியபோது, அந்த செயல்முறையை நிறுத்த டெஸ்டோடிரோன் மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் எம்மா தனது பாலினத்தை 'தலைகீழாக' மாற்றுவது மிகவும் தாமதமானது என்று நம்பினார்.
ஆனால், 2019யில் ஒரு விபத்து ஏற்படும் வரை ஒரு ஆணாகவே வாழ்ந்து வந்தார் எம்மா. அவரது கூற்றுப்படி, அவரது தலையில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, உடலில் டெஸ்டோடிரோன் உற்பத்தியை பலவீனப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்த
பெண்ணாக மாறுவதற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை
அதன் பின்னர் பெண்ணாக மாறுவதற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சையை (HRT) வைக்குமாறு எம்மா கேட்டுக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தபோதும் 'இந்த புதிய வாழ்க்கை முறைக்கு ஒரு பெண்ணாக நுழைவதில் எம்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் ஒரு பெண்ணாக இருக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் கூறியபோது நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அது அர்த்தமுள்ளதாக இருந்தது. என்னை HRT போடப்பட்டு, என் உடலை அதன் சொந்த காரியத்தை செய்ய அனுமதிக்க சொன்னேன்' என தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வாக்கில் எம்மாவுக்கு நீண்ட கூந்தல் இருந்தது, மீண்டும் அவருக்கு மாதவிடாய் வந்ததுடன் மார்பகங்களும் வளர்ந்துள்ளன. எனது மாற்றத்திற்கு எனது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர், நாங்கள் விடயங்களைப் பற்றி பேசினோம், நாங்கள் இப்போது நல்ல உறவில் இருக்கிறோம் என எம்மா தெரிவித்துள்ளார்
கனடா அரசுக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்கும் கூகுள் : வெளியான காரணம்
ஒன்லைன் செய்திப் பிரசூரம் குறித்த கனடா சட்டத்திற்கு அமைய, வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என கனடா மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கால் செயின்ட் ஓன்ஞ் அறிவித்துள்ளார்.
இணைய வழி செய்தி ஊடகங்களை பாதுகாக்கும் நோக்கில் லிபரல் அரசாங்கம் பில் சீ18 எனும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தீர்மானம்
இந்த சட்டம் தொடர்பில் கனடாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், கூகுள் நிறுவனம், கனடாவில் செய்திகளை முடக்குவதற்குத் தீர்மானித்திருந்தது.
எனினும், கனடா அரசாங்கத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, வருடாந்தம் 100 மில்லியன் டொலர் கொடுப்பனவு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளம் பிரதான வீதியில் இந்தத் தம்பதியினரின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பின்னால் உள்ள தங்கும் இடத்தில் மேற்படி தம்பதியினர் வசித்து வந்தனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியினர்
இந்நிலையில் நேற்று இரவு வழமைபோல் அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற போது தம்பதியினர் வியாபார நிலையத்துக்குப் பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றனர்.
இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாகச் செட்டிகுளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
காணாமல் போன நகை
இந்தச் சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் என்ற வயோதிபரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் இரத்தங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அந்தக் கத்திகளாலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்க நகை ஒன்றும் காணாமல்போயுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை திருட்டில் ஈடுபடும்போது இடம்பெற்றதா அல்லது தனிப்பட்ட தகராறு காரணமாக நடைபெற்றதா போன்ற கோணங்களில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Wednesday, November 29, 2023
இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை
இ
லங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.
சில கடைகளில் சாதாரண தரமான எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை சந்தை
மேலும், எலுமிச்சை பழம் விலை அதிகரித்துள்ள நிலையில்,வல்லாரை கீரையின் விற்பனையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் இதன் விலைகள் கட்டுப்பாடின்றி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய தேங்காய் வகை
மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும், சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
மேலும், இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும், இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும், நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வை தொடங்கியுள்ளது.
இவ்வாறான இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு... இருவர் பலி: அதிகாரிகள் ஆலோசனை
ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்கள் வெளியே செல்லவேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நேற்று எச்சரித்திருந்தது.
ஜேர்மனியில் கடுமையான பனிப்பொழிவு: இருவர் பலி
இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கார் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மரங்கள் விழும் அபாயம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று Rheingau-Taunus மாகாணம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
வடக்கு ஜேர்மனியைப் பொருத்தவரை பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றாலும், ஏராளமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
சாலை போக்குவரத்து மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு கையிருப்பு நிலைமை
இந்நிலையில், குளிராலும் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எரிவாயு சேமிப்பு காரணமாக நாட்டின் எரிசக்தி விநியோக நிலைமை கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக இருந்தாலும், அபாயம் தொடர்ந்து நீடிப்பதாக பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி (BNetzA) தெரிவித்துள்ளது.
பெடரல் நெட்வொர்க் ஏஜன்சியின் தலைவரான தலைவர் Klaus Mueller கூறுகையில், அதிக குளிரான குளிர்காலம் காரணமாக எரிவாயு பயன்பாடு கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளதுடன், அதனால், இப்போதே எரிவாயு தேவை குறித்து முடிவு செய்யமுடியாது என்றும், அதனால் மக்கள் எப்படியெல்லாம் எரிவாயுவை சேமிக்கமுடியும் என்பதைக் குறித்து கவனமாக சிந்தித்து செயல்படுமாறும் கேட்டுகொண்டுள்ளார்.
கனேடிய மாகாணமொன்றில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு பயங்கர தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கர தொற்றுநோய் உறுதி
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 23ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு வான்கூவரிலிருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு கால்கரியை வந்தடைந்த ஏர் கனடா நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் பயங்கர தொற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆகவே, மதியம் 12.45 மணியிலிருந்து 3.15 மணி வரையில் கால்கரி விமான நிலையத்தில் இருந்தவர்கள் தொற்று பாதித்த அந்த பயணியின் அருகில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆகவே, 23ஆம் திகதி கால்கரி விமான நிலையத்தில் இருந்தவர்கள்,
24ஆம் திகதி அந்த பயணி சென்ற சிறார் ஆல்பர்ட்டா மருத்துவமனையின் அவசர மருத்துவப்பிரிவின் காத்திருக்கும் அறையில் மாலை 4.00 மணி முதல் 9.30 மணி வரை இருந்தவர்கள்,
Passenger Has Traveled Air With Serious Infection
நவம்பர் 27ஆம் திகதி ஆல்பர்ட்டா சிறார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவின் காத்திருப்பு அறையில் மதியம் 1.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருந்தவர்கள், ஆகியோர், மருத்துவமனையை அழைத்து ஆலோசனை கேட்கவும், தங்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்காணித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தொற்றுநோய் என்றும், அது காற்றின்மூலம் எளிதாக பரவக்கூடியது என்றும், அதற்கு சிகிச்சை எதுவும் கிடையாது என்றும் ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தக்காளி உண்ணவேண்டாம்... பிரித்தானியர்களுக்கு நிபுணர் எச்சரிக்கை
தக்காளி என்பது சான்ட்விச்களிலும் சாலட்களிலும் சேர்க்கப்படும் தவிர்க்கமுடியாத ஒரு உணவுப்பொருள். ஆனால், டிசம்பர் மற்றும் ஜனவரியில் தக்காளி உண்ணவேண்டாம் என பிரித்தானியர்களை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
என்ன காரணம்?
எதனால் தக்காளி உண்ணக்கூடாது, தக்காளியில் ஏதாவது பிரச்சினையா என்றால், அப்படியெல்லாம் இல்லை, எச்சரிக்கை விடுத்துள்ளவர் ஒரு சுற்றுச்சூழல் நிபுணர்.
குளிர் காலத்தில் சில உணவுகளை உண்பதால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம். அதாவது, தக்காளிப்பழங்கள், லெட்டூஸ், ஆஸ்பராகஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை அதிக அளவில் கார்பனை வெளியேற்றக்கூடிய சரக்கு விமானங்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.
அதனால், பெருமளவில் கார்பன் வெளியிடப்படுகிறது, புவி வெப்பமடைகிறது என்கிறார், வாழைப்பழங்கள் எவ்வளவு மோசமானவை என்னும் புத்தகத்தை எழுதியவராகிய Mike Berners-Lee என்பவர்.
ஆரஞ்சுப் பழங்கள், வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் பழங்கள் படகுகள் மூலம் கொண்டுவரப்படுவதால், அவை குறைந்த அளவிலான கார்பனையே வெளியிடுவதால், அவற்றை உண்ணலாம் என்கிறார் Mike.
சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்... நிலவும் பணியாளர் பற்றாக்குறை
புலம்பெயர்வோரின் வருகையை விரும்பாத சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறை முதலான சில அத்தியாவசியத் துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ள அதே நாளில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக மற்றொரு செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நிலவும் பணியாளர் பற்றாக்குறை
சுவிட்சர்லாந்தில்,மருத்துவத்துறையில், செவிலியர்கள், endocrinologists மற்றும் பார்மஸி பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், developers, software மற்றும் applications analysts, SAP consultants ஆகிய பணி செய்வோர், பொறியியல் துறையில், mechanical engineering technicians, heating planners ஆகிய பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்
அதே நேரத்தில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம். விடயம் என்னவென்றால், இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு உள்ளது.
அதாவது, பணியாளர் பற்றாக்குறை நிவுவதால், வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு மருத்துவமனையில் குறைவான செவிலியர்களே உள்ளதால், அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.
கொஞ்சம் செவிலியர்கள் ஏராளமான நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நிலையிலும், குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறதாம். வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் சொந்த வேலைகளையும், வீட்டையும் கவனிக்க முடியாத நிலைமை ஆகிய காரணங்களால் செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.
சமீபத்திய தகவல்களின்படி, 36 சதவிகித இளம் செவிலியர்கள், 20க்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள், சில ஆண்டுகள் வேலை பார்த்த நிலையிலேயே வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.
ஆக, சுவிட்சர்லாந்தில், சுமார் 7,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவாம்!
கனடாவை புறக்கணிக்கும் இந்தியா..! விசா வழங்குவதில் சாதனைப் படைத்த நாடு
கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டமையால், இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்திய மாணவர்கள் கல்விக்கு என கனடாவையே பெரும்பாலும் நாடி வந்த நிலையில், அந்த நாட்டின் காலிஸ்தான் ஆதரவு நிலை புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் கனடாவுக்கான விசா வழங்குவதையும் இந்தியா நிறுத்தி வைத்தது. தற்போது விசா வழங்குவதை முன்னெடுத்து வந்தாலும், புதிதாக பல்கலைக்கழக கல்வியை நாடும் மாணவர்கள் தற்போது கனடாவை தவிர்த்து அமெரிக்காவை நாடுவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கா செல்லும் மாணவர்கள்
கடந்த 2022 ஒக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையில் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 140,000 என தெரியவந்துள்ளது.
இது சாதனை எண்ணிக்கை என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 140,000 க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை வழங்கியுள்ளன என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையில் சர்வதேச அளவில் 10 மில்லியன் விசாக்களை அமெரிக்கா விநியோகித்துள்ளது.
மட்டுமின்றி, 2015க்கு பின்னர் முதல் முறையாக வணிகம் மற்றும் சுற்றுலாவுக்காக கிட்டத்தட்ட எட்டு மில்லியன் விசிட் விசாக்களை அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.
அத்துடன் 2017க்கு பின்னர் 600,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஆலய கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்த திருடர்கள்! ஐம்பொன் அம்மன் சிலை மாயம்
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகைதிருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
காவல்துறையினரிடம் முறைப்பாடு
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி அளவில் ஆலய பூசகர் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதே குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரிய வந்ததாக ஆலய பூசகர் காவல்துறையினரிடம் வாய்முறைப்பாடு வழங்கியுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tuesday, November 28, 2023
கொழும்பில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிறுநீரக மோசடி! விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வறிய குடும்பங்களை இலக்கு வைத்து இடம்பெறும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்த குழு பரிந்துரை
Massive Fraud In A Private Hospital In Colombo
முறைப்பாடு
கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வசிக்கும் நால்வர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுநீரக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்
இதேவேளை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சத்திரசிகிச்சைக்கு அனுமதி
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணையில் தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் மூன்று ஊழியர்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் மீண்டும் அது தொடர்பான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்! தாய் வெளியிட்ட தகவல்
பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவினை சேர்ந்த அதிகாரிகளான நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 91046 தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனம் மீது விழுந்த தடுப்பு படலை: பொலிஸ் விசாரணை தீவிரம்
மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனம் மீது விழுந்த தடுப்பு படலை: பொலிஸ் விசாரணை தீவிரம்
கொஸ்பலான பிரதேசத்தினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி காப்பாற்றப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் பாய்ந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் மரணம்: மனதை உருக்கும் துயர சம்பவம்
இ
ரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தைகளை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அன்றாடம் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் பொருளாதாரம்
மக்கள் அன்றாடம் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால் ஜேர்மன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டுச் செலவு குறைவதால் பாதிக்கப்படும் பொருளாதாரம்
பிரித்தானியாவில், 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வாக்கில், பலத்த அடி வாங்கியிருந்த உணவகத் துறையின் வருவாயை சற்று மேம்படுத்த, அப்போது நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் பெயர், Eat Out to Help Out திட்டம். அதாவது, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியே சென்று உணவகங்களில் உணவு உண்ணலாம், தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ரிஷி எதிர்பார்த்தபடியே, இத்திட்டம் பொருளாதார ரீதியில் நல்ல பலனைக் கொடுத்தது.
ஆக, மக்கள் அல்லது தனிநபர் செய்யும் செலவு அல்லது வீட்டுச் செலவு குறைவதால் நாட்டின் பொருளாதாமே பாதிக்கப்படுகிறது.
இது ஜேர்மனியில் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், மக்கள் வீடுகளுக்கான அடிப்படைப் பொருட்களை வாங்குவது 0.3% குறைந்துள்ளது. இதனால், ஜேர்மனியின் பொருளாதாரம் 0.1 சதவிகிதம் சுருங்கியுள்ளதாக ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிநபர் செலவின் முக்கியத்துவம்
தனியார் நுகர்வோர் செலவீனம், அதாவது ஒரு தனிநபர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க செலவிடும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்கு வகிக்கிறது.
ஜேர்மனியில், தனியார் நுகர்வோர் செலவீனம், இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியை (0.2%) தொடர்ந்து, 0.3% குறைந்துள்ளது. இருப்பினும், பொதுச் செலவு ஒரு வருடத்திற்குப் பின் முதல் முறையாக 0.2% அதிகரித்துள்ளது.
German Economy Suffered
மீண்டும் முன்னேற்றம் காணும்
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் காணப்பட்ட பலவீனமான பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, ஜேர்மன் பொருளாதாரம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்திறனில் சிறிது வீழ்ச்சியுடன் தொடங்கியது என்கிறார் புள்ளியியல் அலுவலக தலைவரான ரூத் பிராண்ட்.
அதிக ஆற்றல் செலவுகள், பலவீனமான உலகளாவிய ஆர்டர்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக ஜேர்மனி இந்த ஆண்டு ஐரோப்பாவில் பலவீனமான பொருளாதாரங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் மீண்டும் சுருங்கி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறிது முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டும் என்று ஜேர்மன் நிதி அமைப்பான Bundesbank தனது மாதாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி மற்றும் மீன்கள் உட்பட பெரும்பாலான உணவுப் பொருட்களில் விஷம்! பொது மக்களிற்கு முக்கிய தகவல்
உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமையால் உலகில் விஷ உணவுகளை உட்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பலாப்பழத்தைப் பாதுகாக்கவும், மாம்பழங்களைப் பழுக்க வைக்கவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
Srilanka Food Camical
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கருத்து தெரிவிக்கையில்,
சட்ட நடவடிக்கை
இலங்கையில் பெரும்பாலான கடைகளில் கோழி பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் என்பன மஞ்சள் நிறமாக மாற்றுவதற்கு அதிக அளவு மஞ்சள் சாயம் பயன்படுத்தப்படுகின்றது.இது ஆரோக்கியமற்ற நிலைமையை ஏற்படுத்துகின்றது.
மஞ்சளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சள் நிற சாயம், சோறு போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சாப்பிட்டால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாகவுள்ளது.
எனவே இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைப்பைத் தயாரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் உறுதி செய்யப்பட்ட பன்றிக் காய்ச்சல்
பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்றிக் காய்ச்சம் உறுதி
வடக்கு யார்க்ஷயரில் ஒரு பொது மருத்துவர் முன்னெடுத்த அறுவை சிகிச்சையின் போது வழக்கமான காய்ச்சல் சோதனையில் பன்றிக் காய்ச்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு சுவாச பாதிப்பு அறிகுறிகள், லேசான காய்ச்சல் இருந்ததாகவும், ஆனால் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய நபர் பன்றிகளுடன் நேரம் செலவிட்டாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 50 பேர்களில் மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2009ல் பன்றிகளில் காணப்படும் ஒருவகை தொற்று பரவலாக மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வடக்கு யார்க்ஷயரின் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை UKHSA தெரிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
இதனிடையே, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக வயதானவர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள், பிற சுகாதார நிலைமைகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், பன்றிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் மந்தைகளில் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
புற்றுநோய் மருந்தே நஞ்சாகி உயிரைப் பறித்த பயங்கரம்:
உலகம், அறிவியலில், மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனாலும், இன்றுவரை சில நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்க்கமுடியவில்லை என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க விடயம்தான்...
மருந்தே நஞ்சாகி உயிரைப் பறித்த பயங்கரம்
சிலவகை புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றாலும், அவற்றை புற்றுநோய் பாதித்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கமுடியாது. காரணம் பக்க விளைவுகள்.
ஆக, புற்றுநோய் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள், புற்றுநோயால் உயிரிழ்ப்பதைவிட, புற்றுநோய்க்கான சிகிச்சையின், அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகளால் உயிரிழக்கிறார்கள் என்பது ஜீரணிக்கமுடியாத உண்மை.
அவ்வகையில், கனடாவில் பிரபல மருத்துவராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்து ஒன்றே அவரது உயிரைப் பறித்துவிட்டது.
அதிர்ச்சிக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், ஒரு வகையில், அவர் கனடாவில் வாழும் இந்தியர் என்பதாலேயே சீக்கிரமாக மரணமடைந்துவிட்டார் என்று கூட சொல்லமுடியும் என்பதுதான்!
புற்றுநோய் சிகிச்சையால் பலியான இந்திய வம்சாவளியினர்
Dr. அனில் கபூர் (Anil Kapoor, 58), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Burlingtonஇனில் வாழ்ந்துவந்த நிலையில், அவரை பெருங்குடல் புற்றுநோய் தாக்கியது.
ஜனவரி மாதம் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு சிகிச்சை துவக்கப்பட்டது. அவர் குணமடைவார், இன்னும் பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்வார் என நம்பிக்கையுடன் இருந்த அவரது குடும்பத்தினர், எதிர்பாராத பெரிய அதிர்ச்சி ஒன்றை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆம், சிகிச்சை துவங்கி சில வாரங்களிலேயே, அதாவது பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, Dr. அனில் கபூர் உயிரிழந்துவிட்டார்.
உயிரிழப்புக்குக் காரணம் புற்றுநோய் அல்ல, மருந்து...
இந்நிலையில், Dr. அனில் கபூரின் மரணத்துக்குக் காரணம், அவரது புற்றுநோய் பரவியது அல்ல, அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துதான் அவரது உயிரைப் பறித்துள்ளது என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.
பெருங்குடல், மலக்குடல், வயிறு, மார்பு மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களின் சிகிச்சைகளில், 1970களிலிருந்தே Fluorouracil (5-FU) என்னும் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாத்திரை வடிவில் இந்த மருந்தின் பெயர் Capecitabine ஆகும்.
இந்த மருந்து கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.
இந்தியர் என்பதாலேயே சீக்கிரமாக மரணமடைந்துவிட்டார்?
அதாவது, இந்த மருந்தை ஒருவருக்கு கொடுக்கலாமா, அவருக்கு இந்த மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்துமா, பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை அறிவதற்காக ஒரு பரிசோதனை செய்வார்கள்.
அப்படி செய்யப்பட்ட பரிசோதனையில், Dr. அனில் கபூருக்கு பாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. ஆகவே, அவருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.
அதற்குக் காரணம் என்னவென்றால், ஒருவருக்கு இந்த மருத்து ஒத்துக்கொள்ளுமா என்பதற்காக கனடா முதலான நாடுகளில் செய்யப்படும் பரிசோதனை, சில குறிப்பிட்ட மரபியல் மாறுபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த மருந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும், அவ்வகையில் வெறும் நான்கு மரபியல் மாறுபாடுகளை மட்டுமே இந்த பரிசோதனையால் கண்டுபிடிக்கமுடியும்.
அந்த நான்கு மாறுபாடுகளுமே வெள்ளையர்களின் உடலில் மட்டுமே காணப்படுபவை. எளிமையாகக் கூறினால், அந்த பரிசோதனையால் ஆசியர்கள் உடலிலுள்ள மரபியல் மாறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது.
ஆகவேதான் Dr. அனில் கபூருக்கு அந்த மருத்துவப் பரிசோதனை செய்தபோது, பரிசோதனை முடிவுகள் அவருக்கு பாதகமான முடிவைத் தரவில்லை. அதாவது, அந்த குறிப்பிட்ட பரிசோதனை தேடிய மரபியல் மாறுபாடு இந்தியர் உடலில் இருக்காது. அது வெள்ளையர்கள் உடலில் மட்டுமே இருக்கும்.
இன்னொரு வகையில் கூறினால், இந்தியர்கள் அல்லது ஆசியர்கள் உடலில் உள்ள மரபியல் மாறுபாட்டை அந்த பரிசோதனையால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவேதான், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து, சாதகமான பரிசோதனை முடிவையும் மீறி அவரை பலிவாங்கிவிட்டது.
உலகம் மருத்துவத் துறையில் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் எல்லா வசதிகளும், சரிசமமாக எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம் போலிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மீண்டும் கவலையளிக்கும் ஒரு செய்தி
சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், வீட்டு வாடகைகள் மீண்டும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் உயரும் வட்டி வீதம்
பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.
ஜூன் மாதம், பெடரல் வீட்டு வசதி அலுவலகம் இந்த வட்டி வீதத்தை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் அது அதிகரிக்க உள்ளது. அந்த உயர்வு வெள்ளிக்கிழமை அமுலுக்கு வருகிறது.
ஏற்கனவே அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள்
மக்கள் ஏற்கனவே பணவீக்கத்தாலும், அதிகரித்துள்ள மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தற்போது கூடுதலாக இந்த வாடகை உயர்வு அவர்கள் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் தொடர்பில் அரசின் முடிவு
புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வரவுசெலவுத் திட்டத்தில் இணைத்துள்ளது.
கோட்பாட்டு ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை வினைத்திறனான நடைமுறைப்படுத்தலின் மூலம் சாத்தியமாக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்தல் என்பதே முக்கிய காரணி என்பதுடன், இந்த வார்த்தைகளை நடைமுறைச் சாத்தியமாக்கக் கூடிய நபர்களையே நாம் அங்கீகரிக்கின்றோம்.
ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்புக் கொடுத்தாலும், இதனைப் பூர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பு அவசியமாகும்.
2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், அது நாட்டை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.
2024 வரவுசெலவுத் திட்டம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது, இது தேசத்திற்கு சாதகமான பாதையை ஏற்படுத்துகிறது.
புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் ஒரு அங்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இடம்பெறும் மோசடி: இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பணி புரிவதற்காக இலங்கையில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையில் எந்த விதமான மோசடிகளும் இடம்பெறக்கூடாது என இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இடைத்தரகர்களால் அதிகளவு கட்டணம் பெறப்படுவதாகா வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது, "இஸ்ரேலில் உள்ள 2,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக கடந்த மே மாதம் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை வலியுறுத்தி எழுத்து பூர்வமான உடன்படிக்கையும் கைச்சத்திடப்பட்டது.
அதன்படி, முதலில், இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக 500 பேர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா பணியாளர்களை அனுப்பும் போட்டியில் மும்முரமாக ஈடுபடுவதன் காரணமாக ஆட்சேர்ப்பு செயன்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இடைத்தரகர்களாக செயற்படுபவர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றமை இந்த ஆட்சேர்ப்புக்காக முன்வரும் இலங்கை ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் சாத்தியம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன்
அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக கட்டடத்துக்கு மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் அவரை மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சீன சுவாச நோய் இலங்கையில்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த தெரிவித்துள்ளார்.
இது சீனாவில் இருந்து பதிவாகும் சளியின் கலவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சீனாவில் பரவிவரும் நிமோனியா நிலைமை இந்நாட்டிலும் பரவுமானால், அதனைக் கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் உள்ளதாகவும், வைரஸ் தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை எனவும் சந்தன ஜீவந்த கூறியுள்ளார்..
பரவிவரும் புதிய நோய் குறித்து சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Monday, November 27, 2023
இலங்கையில் உயிரிழந்தவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த அதிசயம்
கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கப்பட்ட செய்யப்பட்ட நபர் 7 நாட்களின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இறந்தவர்களின் உறவினர்கள் ஒரு குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கம்பளை வைத்தியசாலை
உயிரிழந்தவரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட தாயும் சகோதரரும் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.
சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சடலத்தை விடுவித்ததுடன், குழுவினர் சடலத்தை மேரிவிலவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு 2 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்தனர்.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டிற்கு வந்துள்ளார். “அம்மா, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். “நீங்கள் கம்பளையில் இறந்துவிட்டீர்கள் என மக்கள் வருத்தப்பட்டனர்.
நாங்கள் உங்களை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம்” என தாயார் குறிப்பிட்டுள்ளார். “இல்லை.. அம்மா நான் கம்பளைக்கு போகவில்லை. "நான் நாவலப்பிட்டியில் இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தாயும், சகோதரனும், உறவினர்களும் இறந்து விட்டதாக நினைத்து புதைத்தவர் தொடர்பில் ஆராய்வதற்காக மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.
மரண விசாரணை
சுமார் எழுபதாயிரம் ரூபா இறுதிச்சடங்கிற்கு செலவானதாக இக்குழுவினர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவத்தை விபரித்துள்ளனர்.
அதற்கமைய, மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் பேரில் புதைக்கப்பட்ட நபர் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்ததாக கருதப்படும் நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் திருமணமான தனது மகள்களின் வீடுகளில் தங்கி அந்த வீடுகளுக்கு வெளியில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எனினும் சமீபகாலமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர், நாவலப்பிட்டி நகரிலேயே அதிக நேரத்தைக் கழித்ததால், நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை என கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி...
பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த சிலருக்காக என ஒரு சிறப்பு விசா வழங்கப்படுகிறது. அது பட்டதாரி விசா என அழைக்கப்படுகிறது.
இந்த பட்டதாரி விசா குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்...
பட்டதாரி விசா
ஒரு பக்கம் பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மறுபக்கமோ, பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்காக விசா திட்டம் ஒன்றை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
பிரித்தானிய பட்டதாரி புலம்பெயர்தல் பாதை என்னும் இந்த திட்டம், 2012இல் கைவிடப்பட்ட நிலையில், 2021இல் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, பிரித்தானியாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பட்டதாரி விசா குறித்த சில தகவல்கள்
1. இந்த பட்டதாரி விசா, சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தபின், இரண்டு ஆண்டுகள் பிரித்தானியாவிலேயே தங்கவும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மூன்று ஆண்டு காலம் பிரித்தானியாவில் தங்கவும் அனுமதிக்கிறது.
2. இந்த பட்டதாரி விசா காலாவதியாகும் நேரத்தில், விசா வைத்திருக்கும் நபர், சூழ்நிலையைப் பொருத்து, திறன்மிகுப் பணியாளர் விசா போன்ற வேறொரு விசாவுக்கு மாறிக்கொள்ளலாம்.
Good News For Students Studying In Uk
3. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்கள் அரசு உதவி எதற்கும் விண்ணப்பிக்க அனுமதியில்லை.
4. பட்டதாரி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், பொதுவாக 700 பவுண்டுகள். சிலர், உப கட்டணம் ஒன்று செலுத்த நேரலாம்.
இந்த திட்டத்தைக் கெடுக்க முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா முயற்சித்ததும், அவரது திட்டத்தை, கல்விக்கான மாகாணச் செயலரான Gillian Keegan முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
சொந்த மகனுடைய பிறப்பைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த மன்னர் சார்லஸ்
நான் உன் அப்பாவா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என தன்னிடம் மன்னர் சார்லஸ் வேடிக்கையாக கூறியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹரி.
பாதுகாவலருடன் தவறான உறவில் இருந்த டயானா
இளவரசி டயானா, 1986 முதல் 1991 வரை, தனது பாதுகாவலரான மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் தவறான உறவில் இருந்துள்ளார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவரே இதைக்குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்நிலையில், இளவரசர் ஹரியின் தலைமுடி, சார்லசைப்போல இல்லாமல், ஜேம்ஸ் ஹெவிட்டின் தலைமுடியைப்போல இருப்பதாகவும், அதனால், அவருக்கும் ஜேம்ஸுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் எழுதியுள்ளன.
அவர் இறந்தும், அந்த விடயத்தால் இளவரசர் ஹரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அவர் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் ஹரி 1984ஆம் ஆண்டு பிறந்தார். அதற்குப் பிறகுதான் டயானா ஜேம்ஸ் ஹெவிட்டை சந்தித்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிந்தும், ஊடகங்கள் அதைக் குறித்து எழுதுவதில் மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஹரி, தனது DNAவை எப்படியாவது சேகரிக்கவேண்டும் என்று கூட சில ஊடகவியலாளர்கள் முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மகனுடைய பிறப்பைக் குறித்து மோசமாக ஜோக்கடித்த மன்னர் சார்லஸ்...
இப்படி பல ஆண்டுகளாக அந்த விடயம் ஹரிக்கு மனவேதனையை அளித்துவந்த நிலையில், ஒருநாள் மன்னர் சார்லசே அதைக் குறித்து ஜோக்கடித்தாராம்.
நான் உன் உண்மையான அப்பாவா இல்லையா என்பது யாருக்குத் தெரியும் என்று கூறிய சார்லஸ், ஒருவேளை உன் உண்மையான அப்பா Broadmoorஇல் இருக்கக்கூடும் இல்லையா என் அன்பு மகனே என்றாராம். அதாவது, ஹரியையும் ஜேம்ஸ் ஹெவிட்டையும் இணைத்து அவர் ஜோக்கடித்தாராம், விழுந்து விழுந்து சிரித்தாராம்.
அதை அவர் வேடிக்கையாகக் கூறினாலும், அது ஒரு மட்டமான ஜோக்காக இருந்தது என்கிறார் ஹரி.
பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை வெளியேற்றினோம்... மனம் திறந்த இந்திய உயர் ஸ்தானிகர்
பழிக்குப்பழி வாங்கத்தான் கனேடிய தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்றினோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர்.
உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவு அது...
நீண்ட காலமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் நட்பு நீடித்து வருவதாக ஒரு தோற்றம் இருந்துவந்த ஒரு காலகட்டதில், திடீரென ஒரு நாள், இந்தியா மீது பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கனேடிய மண்ணில், கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்ட, ஒரே நாளில் சூழ்நிலை மாறிப்போனது.
கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை கனடா வெளியேற்ற, பதிலுக்கு, கனேடிய தூதர் ஒருவரை இந்தியா வெளியேற்றியது.
அது பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்று தற்போது தெரிவித்துள்ளார் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான சஞ்சய் குமார் வர்மா.
Canadian Ambassador From India To Take Revenge
அது உணர்ச்சிப் பெருக்கில் இருந்த ஒரு காலகட்டம் என்று கூறிய வர்மா, இந்திய தூதர் ஒருவரை கனடா வெளியேற்றியதால், பதிலுக்கு கனேடிய தூதரை இந்தியா வெளியேற்றியதாகவும், அது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் என்றும் கூறியுள்ளார்.
நிச்சயமாக, உறுதியாக நிஜ்ஜர் கொலையில் இந்தியாவின் பங்கு இல்லை
நிஜ்ஜர் கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வர்மா, நிஜ்ஜர் கொலையில், நிச்சயமாக, உறுதியாக இந்தியாவுக்கு பங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வர்மா, நிச்சயமாக முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியதுடன், இரண்டு மாதங்களுக்கு முன் இருந்ததைவிட, தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெறும் தொண்டை வலி... இரு கால்களையும் 5 விரல்களையும் இழந்த லண்டன் சிறுமி
மேற்கு லண்டனைச் சேர்ந்த சிறுமிக்கு ஸ்ட்ரெப் ஏ அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட இரண்டே நாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இரண்டு கால்களும் ஐந்து விரல்களும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டை வலி தொடக்கத்தில்
மேற்கு லண்டனைச் சேர்ந்த 4 வயது Aiyla Mota தொண்டை வலி என்றே தொடக்கத்தில் தமது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாயார் Eulanda Griffith உடனடியாக 111 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் சொறி வருவதைக் கண்காணிக்க கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி Aiyla மூச்சுவிடவும் சிரமப்பட, வயிற்று வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையை நாடியுள்ளனர்.
ஆனால் அவரது உடல் நிலை திடீரென்று மோசமடையவும், மூன்று வாரங்களுக்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார். கண் விழித்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது இரு கால்களும் 5 விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, இடது கண்ணில் இரத்த ஓட்டம் இல்லாததால், தற்போது ஓரளவு பார்வையற்றவள் என்ற நிலையில் உள்ளார்.
இந்த கோலத்தில் பார்ப்பது
வெறும் நான்கு வயதான தமது மகளை இந்த கோலத்தில் பார்ப்பது, தம்மால் தாங்க முடியவில்லை என கூறும் Eulanda Griffith, ஸ்ட்ரெப் ஏ பாதிப்பு எவ்வளவு கொடூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 23ம் திகதி தான் தொண்டை வலி என சிறுமி Aiyla தாயாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து கடுமையான இருமலும், வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுநீர் கழிக்கவும் சிறுமி Aiyla சிரமப்பட்டுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையை தொடர்பு கொண்டு மகளின் நிலை குறித்து விளக்கியுள்ளார். மார்ச் 25ம் திகதி சிறுமி Aiyla மூச்சுவிட சிரமப்பட, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில் நிலை மேலு மோசமடைய, கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையிலேயே செயல்படாத கால்கள் மற்றும் விரல்களை மருத்துவர்கள் துண்டித்துள்ளனர்.
மூன்று மாத காலம் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் ஜூன் 23ம் திகதி சிறுமி Aiyla வீடு திரும்பியுள்ளார். தற்போது உரிய பயிற்சிகளும் சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job