மக்கள் அன்றாடம் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால் ஜேர்மன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டுச் செலவு குறைவதால் பாதிக்கப்படும் பொருளாதாரம்
பிரித்தானியாவில், 2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வாக்கில், பலத்த அடி வாங்கியிருந்த உணவகத் துறையின் வருவாயை சற்று மேம்படுத்த, அப்போது நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் பெயர், Eat Out to Help Out திட்டம். அதாவது, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியே சென்று உணவகங்களில் உணவு உண்ணலாம், தள்ளுபடியும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ரிஷி எதிர்பார்த்தபடியே, இத்திட்டம் பொருளாதார ரீதியில் நல்ல பலனைக் கொடுத்தது.
ஆக, மக்கள் அல்லது தனிநபர் செய்யும் செலவு அல்லது வீட்டுச் செலவு குறைவதால் நாட்டின் பொருளாதாமே பாதிக்கப்படுகிறது.
இது ஜேர்மனியில் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், மக்கள் வீடுகளுக்கான அடிப்படைப் பொருட்களை வாங்குவது 0.3% குறைந்துள்ளது. இதனால், ஜேர்மனியின் பொருளாதாரம் 0.1 சதவிகிதம் சுருங்கியுள்ளதாக ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிநபர் செலவின் முக்கியத்துவம்
தனியார் நுகர்வோர் செலவீனம், அதாவது ஒரு தனிநபர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க செலவிடும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்கு வகிக்கிறது.
ஜேர்மனியில், தனியார் நுகர்வோர் செலவீனம், இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியை (0.2%) தொடர்ந்து, 0.3% குறைந்துள்ளது. இருப்பினும், பொதுச் செலவு ஒரு வருடத்திற்குப் பின் முதல் முறையாக 0.2% அதிகரித்துள்ளது.
German Economy Suffered
மீண்டும் முன்னேற்றம் காணும்
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் காணப்பட்ட பலவீனமான பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு, ஜேர்மன் பொருளாதாரம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்திறனில் சிறிது வீழ்ச்சியுடன் தொடங்கியது என்கிறார் புள்ளியியல் அலுவலக தலைவரான ரூத் பிராண்ட்.
அதிக ஆற்றல் செலவுகள், பலவீனமான உலகளாவிய ஆர்டர்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக ஜேர்மனி இந்த ஆண்டு ஐரோப்பாவில் பலவீனமான பொருளாதாரங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் மீண்டும் சுருங்கி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறிது முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டும் என்று ஜேர்மன் நிதி அமைப்பான Bundesbank தனது மாதாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment