இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த கொடூர தாக்குதலை ஆதரிக்கும் இஸ்லாமிய பயங்கரவாத குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் பிரித்தானியாவில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் செயல்படுவதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரகசிய விசாரணை
Hizb ut-Tahrir என்ற பயங்கரவாத குழுவில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ரகசிய விசாரணையிலேயே பலரது பின்னணியும் அம்பலமாகியுள்ளது.
இதில் ஹமாஸ் ஆதரவு நிலை கொண்ட பலர் முதன்மை கட்டுமான நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், மருந்து நிறுவனங்கள், NHS மற்றும் அணுமின் நிலையத்தில் கூட பணியாற்றி வருகிறார்கள்.
Top Roles Held By Key Members Of Extremist Group@dailymail
லண்டனில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் பல Hizb ut-Tahrir என்ற அமைப்பு ஒருங்கிணைப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் பிரித்தானியாவுக்கான தலைவர் Abdul Wahid என்பவர் வடமேற்கு லண்டனில் Dr Wahid Shaida என்ற பெயரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலை, இஸ்ரேலின் முகத்தில் விழுந்த குத்து என்றே மருத்துவர் வாஹித் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து Hizb ut-Tahrir குழுவானது முன்னெடுத்த லண்டன் பேரணியில், அரபு நாடுகள் தங்கள் பலம் வாய்ந்த ராணுவத்தை இஸ்ரேலுக்கு எதிராக களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எந்த நடவடிக்கையும் இல்லை
மேலும் இந்தப் பேரணியில் தான் புனிதப் போர் என்ற ஜிஹாத் முழக்கம் முதன்முறையாக எழுப்பப்பட்டது. ஆனால் இதே குழு சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் களமிறங்கலாம் என்ற அச்சமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
பொறியியல் பட்டதாரியான லுக்மான் முகீம் தமது சமூக ஊடக பக்கத்தில் ஹமாஸ் தாக்குதலை குறிப்பிட்டு, எங்களை பெருமைப்படுத்திய தருணம் என பதிவு செய்திருந்தார். இவரே அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Hizb ut-Tahrir அமைப்பின் இன்னொரு முக்கிய உறுப்பினரான Jamal Harwood நிதி தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். Hizb ut-Tahrir அமைப்பினை தடை செய்ய பிரித்தானிய அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் அளிக்கப்பட்டாலும், இதுவரை அந்த அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மொத்த இஸ்லாமிய நாடுகளும் ஒரு தலைவரின் கீழ் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தும் அமைப்பு Hizb ut-Tahrir. அந்த தலைவரின் கீழ் பிரித்தானியாவும் ஒரு காலத்தில் செயல்படும் என Hizb ut-Tahrir அமைப்பு நம்புகிறது. ஜேர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment