தீபாவளி வருகையையொட்டி கனேடிய அரசு புதிய தபால் தலையை வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு கனேடிய அரசு புதிய தபால் தலையை வியாழக்கிழமை வெளியிட்டது.
இருப்பினும், தபால் தலையை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு கனடா அரசு தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. கனடாவில் முதன்முறையாக 2017-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
கனடாவில் ஏராளமான இந்திய சமூகத்தினர் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தபால்தலை கனேடிய தபால் துறையால் வெளியிடப்பட்டது.
Justin Trudeau, Canada Post unveils new Diwali stamp 2023,
இது கிறிஸ்டின் டோ என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ரெனா சென் என்பவரால் வரையப்பட்டது. இந்த தபால் தலையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. டேன்டேலியன் பூக்கள் மற்றும் பச்சை மா இலைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு தீபாவளி ஸ்டாம்ப் 5.52 கனேடிய டொலர் (தோராயமாக ரூ. 340) விலையில் ஆறு ஸ்டாம்ப்கள் கொண்ட சிறப்பு கையேட்டில் கிடைக்கிறது.
ஜஸ்டின் ட்ரூடோவும் தீபாவளி கொண்டாடினார்
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் தீபாவளியைக் கொண்டாட நாட்டிலுள்ள இந்திய சமூகத்துடன் இணைந்தார்.
இதனிடையே, இந்த விழா ஒளியின் சின்னம், இது எங்களுக்கு இன்னும் தேவை என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயில்வர், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்
காலிஸ்தானி ஹர்தீப் சிங் நிஜார் கொலையால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். நிஜாரின் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ சந்தேகம் தெரிவித்திருந்தார், அதை இந்தியா ஆதாரமற்றது என்று நிராகரித்தது.
0 comments:
Post a Comment