பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த சிலருக்காக என ஒரு சிறப்பு விசா வழங்கப்படுகிறது. அது பட்டதாரி விசா என அழைக்கப்படுகிறது.
இந்த பட்டதாரி விசா குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்...
பட்டதாரி விசா
ஒரு பக்கம் பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மறுபக்கமோ, பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்காக விசா திட்டம் ஒன்றை மீண்டும் கொண்டுவந்துள்ளது.
பிரித்தானிய பட்டதாரி புலம்பெயர்தல் பாதை என்னும் இந்த திட்டம், 2012இல் கைவிடப்பட்ட நிலையில், 2021இல் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு, பிரித்தானியாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பட்டதாரி விசா குறித்த சில தகவல்கள்
1. இந்த பட்டதாரி விசா, சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தபின், இரண்டு ஆண்டுகள் பிரித்தானியாவிலேயே தங்கவும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மூன்று ஆண்டு காலம் பிரித்தானியாவில் தங்கவும் அனுமதிக்கிறது.
2. இந்த பட்டதாரி விசா காலாவதியாகும் நேரத்தில், விசா வைத்திருக்கும் நபர், சூழ்நிலையைப் பொருத்து, திறன்மிகுப் பணியாளர் விசா போன்ற வேறொரு விசாவுக்கு மாறிக்கொள்ளலாம்.
Good News For Students Studying In Uk
3. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்கள் அரசு உதவி எதற்கும் விண்ணப்பிக்க அனுமதியில்லை.
4. பட்டதாரி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், பொதுவாக 700 பவுண்டுகள். சிலர், உப கட்டணம் ஒன்று செலுத்த நேரலாம்.
இந்த திட்டத்தைக் கெடுக்க முன்னாள் உள்துறைச் செயலரான சுவெல்லா முயற்சித்ததும், அவரது திட்டத்தை, கல்விக்கான மாகாணச் செயலரான Gillian Keegan முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment