இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பணி புரிவதற்காக இலங்கையில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையில் எந்த விதமான மோசடிகளும் இடம்பெறக்கூடாது என இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இடைத்தரகர்களால் அதிகளவு கட்டணம் பெறப்படுவதாகா வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது, "இஸ்ரேலில் உள்ள 2,000 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக கடந்த மே மாதம் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை வலியுறுத்தி எழுத்து பூர்வமான உடன்படிக்கையும் கைச்சத்திடப்பட்டது.
அதன்படி, முதலில், இஸ்ரேலில் பராமரிப்பாளர்களாக பணிபுரிவதற்காக 500 பேர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா பணியாளர்களை அனுப்பும் போட்டியில் மும்முரமாக ஈடுபடுவதன் காரணமாக ஆட்சேர்ப்பு செயன்முறையை விரைவுபடுத்துமாறு இஸ்ரேல் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இடைத்தரகர்களாக செயற்படுபவர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றமை இந்த ஆட்சேர்ப்புக்காக முன்வரும் இலங்கை ஊழியர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் சாத்தியம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கைக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment