துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிரெதிர் கொள்கைகள் கொண்ட நாடுகள்
இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. துருக்கியோ ஹமாஸுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
| Israel Visits Germany Amidst Gaza War
இப்படி எதிரெதிர் கொள்கைகள் கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், அடுத்த வராம் சந்திக்க இருப்பதால், அந்த விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜேர்மனி வருகையின் நோக்கம்
துருக்கி ஜனாதிபதி எர்டகானும் (Recep Tayyip Erdogan), ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸும், மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துவரும் விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக ஜேர்மன் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அடுத்த வாரம், ஜேர்மனியில், ஜேர்மன் அணிக்கும், துருக்கி அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால், போட்டியை எர்டகான் காணச் செல்லமாட்டார் என கூறப்படுகிறது. எர்டகான் தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment