நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, November 27, 2023

சீன அரசின் நிதியுதவியில்1996 வீடுகள் : கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்



இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென் ஹொங்கும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1888 வீடுகள் கொழும்பில்
இன்று (27) பத்தரமுல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.




மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் இந்நாட்டு படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சீன அரசு 552 மில்லியன் யுவான் நிதி உதவி வழங்குகின்றது. இது இலங்கை ரூபாயில் ஏறத்தாழ 24.48 பில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job