பிரித்தானியாவில் வசித்து வந்த வெளிநாட்டவர் ஒருவர், ஹமாஸ் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கும் உரிமையை இழந்துள்ளார்
பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வசித்து வந்த அந்த வெளிநாட்டவர், இனி நாட்டில் தங்கும் உரிமையை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன ஹமாஸ் படைகளுக்கு அந்த நபர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Living In Britain Hamas Sympathiser Visa Revoked@pa
அத்துடன் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் ஏற்கனவே நாட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரவர்மேன் பரிசீலித்து வந்துள்ளார்.
தற்போது அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஹமாஸ் படைகளை ஆதரித்த விவகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டும் முதல் வெளிநாட்டவர் இவர் என கூறப்படுகிறது.
மேலும், குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பே இது தொடர்பான அச்சுறுத்தல் பற்றி எச்சரித்திருந்தார். மட்டுமின்றி, பிரித்தானியாவுக்கு வருபவர்கள் விசாவின் சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து, பயங்கரவாத செயல்களை அங்கீகரிக்க நேர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
வெளியேற்றப்பட வேண்டும்
மேலும், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் இதுபோன்ற வழக்கில் சிக்கும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவோ விசாவைத் திரும்பப் பெறவோ அரசாங்கம் தயங்காது என்பதில் சந்தேகமில்லை எனவும் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தெருக்களில் இனி தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதாக சிக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கடந்த மாத இறுதியில் அமைச்சர் ஜென்ரிக் காவல்துறைத் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் படைகளை ஆதரத்து முழக்கமிடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் பொலிஸ் தரப்பில் எச்சரிக்க பட்டுள்ளது.
அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பிரித்தானியர்களில் 100 பேர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment