தினமும் நான்கு மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வட காசாவில் உள்ள சில பகுதிகளில் நாளாந்தம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான போர் நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த நான்கு மணி நேர போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுமென கூறப்பட்டுள்ளது.
நான்கு மணி நேர போர் நிறுத்தம்
இவ்வாறாக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் போது, அங்குள்ள மக்களுக்கு குறித்த பகுதியில் இருந்து வெளியேற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டு தலைவர்களுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இந்த நான்கு மணி நேர போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இதன்படி, காசாவிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக இரண்டு மனிதாபிமான நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்குமென அவர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
இந்த நிலையில், நான்கு மணி நேர போர் நிறுத்தத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு அடையிலான போர் சரியான பாதையை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Israel Agrees To A Four Hour Daily Ceasefire Us
இதேவேளை, கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போர் காரணமாக இதுவரை ஆயிரத்து 400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதுடன், காசாவில் 10 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment